சூடு பறக்கும் செட் வொர்க்.. சூர்யா படத்திற்காக தீவிரமாக வேலை செய்யும் பாலா.. எங்கே தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யாவின் 41வது படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். அதற்கான பணிகள் கன்னியகுமரியில் சூடு பறக்க நடைபெற்று வருகிறது.

சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் பாலாவுடன் இணைந்து புதிய படத்தை கொடுக்க உள்ளார்.

2டி நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தின் ஷூட்டிங்கை அதி விரைவாக முடித்து விட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் சூர்யா.

கதைக்கு முக்கியத்துவம்

கதைக்கு முக்கியத்துவம்

மாஸ் ஃபார்முலாவை கைவிட்டு நடிகர் சூர்யா கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் சரி அவார்டு வாங்கும் படமாக இருந்தாலும் சரி படத்தின் கதைக்கரு நன்றாக இருந்தால் மட்டுமே நடிகக் ஓகே சொல்லி வருகிறார் சூர்யா. தொடர்ந்து நல்ல கருத்துள்ள படங்களை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறார்.

வாடிவாசல் வேலைகளும்

வாடிவாசல் வேலைகளும்

இயக்குநர் பாலா படத்தை முடித்து விட்டு உடனடியாக வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க உள்ளார் நடிகர் சூர்யா. சமீபத்தில், அந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட்டிலும் கலந்து கொண்டார் சூர்யா. ஜல்லிக்கட்டு காளைகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகின. சூர்யா மற்றும் வெற்றிமாறனின் புகைப்படங்கள் சமூம வலைதளங்களில் டிரெண்டானது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாலா படத்தில்

மீண்டும் பாலா படத்தில்

நந்தா, பிதாமகன், அவன் இவன் (கேமியோ) படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குநர் பாலா இயக்கத்தில் 41வது படத்தில் நடித்து வருகிறார் நடிகர் சூர்யா. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்திற்கான படப்பிடிப்பு மொத்தமும் கன்னியாகுமரியில் படமாக்கப்படப் போவதாக கூறப்படுகிறது.

சூர்யா வீடு செட்

சூர்யா வீடு செட்

இந்நிலையில், இயக்குநர் பாலாவின் டீம் கன்னியாகுமரியில் நடிகர் சூர்யாவுக்காக அமைக்கப்பட்டு வரும் செட் வீட்டின் போட்டோவை சமூக வலைதளத்தில் ஷேர் செய்துள்ளனர். சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் சமயத்தில் இருந்த பாலாவை மீண்டும் தமிழ் சினிமா இந்த படத்தில் பார்க்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

சுசீந்திரத்தில் பாலா

சுசீந்திரத்தில் பாலா

கன்னியாகுமரிக்கு மிக அருகே உள்ள சுசீந்திரத்தில் இயக்குநர் பாலாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை அவரது டெக்னிக்கல் டீம் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளனர். சூர்யாவின் 41வது படத்திற்காக இப்போதே சூர்யா ரசிகர்கள் பெரிய ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த ஆண்டு இறுதிக்குள் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிவா இயக்கத்தில்

சிவா இயக்கத்தில்

பாலா மற்றும் வெற்றிமாறன் படத்தை முடித்து விட்டு செம ஜாலியாக ஒரு பக்காவான கமர்ஷியல் படத்தை இயக்குநர் சிவாவுடன் இணைந்து கொடுக்கப் போகிறாராம் நடிகர் சூர்யா. அந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கப் போவதாகவும் அனிருத் இசை அமைக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X