விஜய் சேதுபதி வேண்டாம்.. ஆர்கே சுரேஷ்தான் வேணும்.. கறார் காட்டிய பாலா.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
சென்னை: இயக்குநர் பாலா தான் தயாரிக்கும் படத்தில் விஜய் சேதுபதிக்கு நோ சொன்னது உள்ளிட்ட சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது.
Recommended Video
தமிழ் சினிமாவில் நடக்கும் சுவாரசிய சம்பவங்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே. அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் கொரோனாவால் உயிரிழந்த தனது மனைவிக்கு அருண்ராஜா காமராஜ் இறுதிச்சடங்குகளை செய்த தகவலை கூறியுள்ளார்.

இதோபோல் புதுப்பேட்டை, காலா, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலியானது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் தயாரிப்பில் இறங்கியுள்ள இயக்குநர் பாலா, தான் தயாரிக்கும் மலையாள ரீமேக்கில் விஜய்சேதுபதிக்கு பதில் ஆர்கே சுரேஷை ஒப்பந்தம் செய்தது உள்ளிட்ட தகவல்களை கூறியுள்ளார்.
நாக சைதன்யாவும் ராஷி கன்னாவும் இணைந்து எடுத்த செல்பியை வைத்து கிளம்பும் வதந்தி குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே. மேலும் ராஷ்மிகா மந்தனா தமிழ் மாப்பிள்ளையை திருமணம் செய்துக் கொண்டு தமிழ் மருமகளாக ஆசைப்படுவது குறித்த தகவலையும் கூறியுள்ளார் பிகே.


Click it and Unblock the Notifications











