7 வயதில் பீடி.. இயக்குநர் பாலா செஞ்ச செம சேட்டை.. அவரே சொன்னதை கேளுங்க
சென்னை: இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இதில் அருண் விஜய், ரோஷினி பிரகாஷ் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைக்க பாலாவும், சுரேஷ் காமாட்சியும் இணைந்து படத்தை தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு நிலவிவரும் சூழலில் இயக்குநர் பாலா கொடுத்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் தவிர்க்கவே முடியாத இயக்குநர்களில் ஒருவர் பாலா. அவர் இதுவரை இயக்கிய எட்டு படங்களில் பெரும்பாலான படங்கள் ஹிட்டாகியிருக்கின்றன. ஹிட் என்பதை தாண்டியும் கல்ட் க்ளாசிக்காக இன்றுவரை அனைவராலும் அந்தப் படங்கள் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது. முக்கியமாக சூர்யா, விக்ரம், ஆர்யா, விஷால் உள்ளிட்ட ஹீரோக்களுக்கு பெரிய அடையாளத்தையும் வெளிச்சத்தையும் வாங்கிக்கொடுத்தவர் பாலா என்பதும் கவனிக்கத்தக்கது.

சில பிரச்னைகள்: முக்கியத்துவம் வாய்ந்த இயக்குநர் என்று பெயர் எடுத்த பாலாவுக்கு சமீப காலமாக சில பிரச்னைகள் ஓடிக்கொண்டிருந்தன. அதாவது தனது மனைவி மலரை விவாகரத்து செய்தார். அதற்கு பலர் காரணங்கள் யூகங்களாக சொல்லப்படுகின்றன. பர்சனல் வாழ்க்கையில் அந்தப் பிரச்னையை சந்தித்த அவர் தனது சினிமா வாழ்க்கையிலும் ஒரு பிரச்னையை சந்தித்தார். விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து அர்ஜுன் ரெட்டி படத்தை வர்மா என்ற பெயரில் ரீமேக் செய்தார் பாலா.
கரும்புள்ளி: படத்தின் முழு வேலைகளும் முடிந்து விக்ரம் அந்தப் படத்தை பார்த்தார். ஆனால் அந்தப் படத்தில் விக்ரமுக்கு உடன்பாடு இல்லாததன் காரணமாக அந்தப் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என்று சொல்லிவிட்டார். அடையாளம் கொடுத்த இயக்குநரையே விக்ரம் அவமதித்துவிட்டாரே என்று பலரும் கொதிப்படைந்தார்கள். ஆனால் பாலாவோ அதுகுறித்து நாகரீகமாக ஒரு அறிக்கையை விட்டுவிட்டு அமைதியானார்.
வணங்கான் பாலா: இப்படி தொடர்ந்து சறுக்கிக்கொண்டிருந்த பாலா எப்படியாவது மீண்டும் பழைய ஃபார்முக்கு வர வேண்டும் என்று நினைத்து சூர்யாவை வைத்து வணங்கான் படத்தை தொடங்கினார். ஒரு ஷெட்யூலில் நடித்த அவர் படத்திலிருந்து விலகினார். ஆனால் அது விலகல் இல்லை தாங்கள் இரண்டு பேருமே பரஸ்பரமாக பேசி பிரிந்தோம் என்று பாலா தெரிவித்தார். அதனையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை முடித்திருக்கிறார் பாலா. படமானது ஜனவரி 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் அவர் கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
7 வயதில் பீடி: தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நான் 7 வயதில் பீடி குடித்தேன். 10ஆம் வகுப்பு படிக்கும்போது சிகரெட் அடித்தேன். பீடி குடித்தபோது அதனை சரியாக பற்ற வைக்க தெரியவில்லை. தவறுதலாக பருத்திகாட்டில் நெருப்பு பற்றியதால் அந்த காடே பற்றி எரிந்துவிட்டது. அப்போது வீட்டுக்கும் தெரிந்துவிட்டது. சிகரெட்டை இன்னமும் விட முடியவில்லை. குறைத்திருக்கிறேன். அதனையும் நிறுத்துவதற்கு எப்படியும் ஒரு காலம் வந்துதானே ஆகும்" என்றார்.


Click it and Unblock the Notifications











