அருண் விஜய்யை நடிக்க வைக்க இதுதான் காரணம்.. மனம் திறந்த பாலா

சென்னை: இயக்குநர் பாலா அருண் விஜய்யை வைத்து தற்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பை சம்பாதித்திருக்கும் இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் ரிலீஸாகிறது. அன்றைய தினம்தான் விடாமுயற்சி திரைப்படமும் ரிலீஸாகவிருக்கிறது. இந்தச் சூழலில் படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவருவதால் ப்ரோமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கின்றன. அந்த வகையில் இயக்குநர் பாலா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

சேது படத்தை இயக்கி தனது முதல் படத்திலேயே பெரும் கவனம் ஈர்த்த பாலா பல ஹீரோக்களுக்கு அடையாளத்தை பெற்றுக்கொடுத்தவர். அவரது இயக்கத்தில் நடித்த பிறகுதான் விக்ரம், சூர்யா, அதர்வா, விஷால், ஆர்யா என பலருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க அவர் தற்போது வணங்கான் படத்தை இயக்கி முடித்திருக்கிறார். அந்தப் படத்தில் முதலில் சூர்யாதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலக; அருண் விஜய் ஹீரோவாக நடித்திருக்கிறார்.

arun vijay bala suriya

பாலா 25: வணங்கான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி மாதம் 10ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவும்; பாலா திரைத்துறைக்கு வந்து 25 வருடங்கள் நிறைவடைந்ததை அடுத்து பாலா 25 நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. இதில் சூர்யா, சிவக்குமார், மணிரத்னம், மாரி செல்வராஜ், சிவகார்த்திகேயன் என பெரும் நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டது. நிகழ்ச்சியில் பலரும் பாலா குறித்து நெகிழ்ச்சியாக பேசினார்கள்.

ப்ரோமோஷன்: வணங்கான் ரிலீஸ் தேதி நெருங்கிவருவதால் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சூடு பிடிக்க ஆரம்பித்திருக்கின்றன. அந்தவகையில் இயக்குநர் பாலா பல வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து ஊடகங்களுக்கு பேட்டிகளை கொடுத்துவருகிறார். அந்தவகையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் வணங்கான் படத்தில் அருண் விஜய்யை எதற்காக நடிக்க வைத்தேன் என்று காரணத்தை கூறியிருக்கிறார். அவர் கூறுகையில், "அருண் விஜய்யுடன் ஏ.எல்.விஜய் பணியாற்றியிருக்கிறார்.

அவர்தான் சொன்னார்: அவர்தான் என்னிடம் அருண் விஜய் ரொம்பவே அர்ப்பணிப்பு மிகுந்த நடிகர் என்று சொன்னார். அதற்கு பிறகுதான் அருண் விஜய்யை நேரில் சந்தித்தேன். அவர் என்னிடம் நடந்துகொண்ட விதமும் எனக்கு ரொம்பவே பிடித்துப்போனது. அதனால் இவரை வைத்தே வணங்கான் திரைப்படத்தை இயக்கினால் என்ன என்று எனக்கு தோன்றி பிறகு அவரை ஹீரோவாக நடிக்க வைக்க முடிவு செய்தேன்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X