“எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே“.. இயக்குநர் பாலாவிடம் மொக்கை வாங்கிய பயில்வான் ரங்கநாதன்!
சென்னை : சினிமா செய்தியாளர் பயில்வான் ரங்கநாதனை இயக்குநர் பாலா மேடையில் பங்கமாக அசிங்கப்படுத்தி உள்ளார்.
பிரபல பத்திரிக்கையாளர், தமிழில் சினிமாவில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். இவர் திரைப்படங்களில் நடித்து பிரபலமானதை விட நடிகர், நடிகைகளின் அந்தரங்க விஷயத்தைப் பேசித்தான் மிகவும் பிரபலமானார்.
பயில்வான் ரங்கநாதன் மீது பாடகி சின்மயி, நடிகை கஸ்தூரி, நடிகை ஓவியா உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் சமூக வலைதளங்களில் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து உள்ளனர்.

பயில்வான் ரங்கநாதன்
நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களில் பேசி வருகிறார். நடிகைகளுக்கு சினிமாவில் எப்படி வாய்ப்பு கிடைத்தது, நடிகைகள் எப்படி பிரபலமானார்கள், சினிமா பிரபலங்களின் விவாகரத்து என சகல விஷயத்திலும் மூக்கை நுழைத்து, அவர்கள் குறித்து அசிங்கமாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

விளாசிய ரேகா நாயர்
சமீபத்தில் இரவின் நிழல் படத்தில் நடித்த ரேகா நாயர் குறித்து தனது யூடியூப் சேனலில் கண்டபடி பேசியிருந்தார். இதனால் கடுப்பான நடிகை ரேகா நாயர் அந்தரங்க விஷயங்கள் குறித்து யூடியூப்பில் பேசிய பயில்வான் ரங்கநாதனே திருவான்மியூர் கடற்கரை பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்த பயில்வான் ரங்கநாதனை மறித்து, நான் எப்படி வேணும்னாலும் நடிப்பேன் நான் என்ன உன் பொண்ணா? இல்ல பொண்டாடியா? என சகட்டுமேனிக்கு விளாசி தள்ளினார்.
எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே
இந்நிலையில்,பிசாசு திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் அப்படத்தில் தயாரிப்பாளரான பாலாவிடம் எடக்குமுடக்கான கேள்வி கேட்டு மாட்டிக்கொண்ட பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், பிசாசுன்னு படத்திற்கு தலைப்பு வெச்சி இருக்கீங்க அதனால் தான் கருப்பு கருப்புன்னு இருக்கீங்களா என்று கேட்டுள்ளார் பயில்வான். இதற்கு பாலா, பிசாசுன்னா கருப்புல தான் இருக்கனுமா பிங்க் கலர்ல சட்டை போட்டு வரலாம்ல என்று பயில்வான் போட்டிருந்த பிங்க் கலர் சட்டையைவைத்து பயங்கரமாக கிண்டல் அடித்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறாரே என இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.
Recommended Video

ராமமா? நாமமா?
சமீபத்தில் சீதாராமம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் துல்கர் சல்மானிடம் இந்த படத்திற்கு சீதாராமம் என பெயர் வைத்துள்ளீர்களே ராமம் னா என்ன? என்று கேட்டார். தொடர்ந்து ராமமா? நாமமா? என்ன எனக்கு புரியவில்லை என துல்கர் சல்மானை கிண்டலடிக்கும் விதத்தில் தொடர்ந்து கேள்வி கேட்டு அவர் கடுப்பாக்கினார்.


Click it and Unblock the Notifications











