Vanangaan : அருண் விஜய்யை டார்ச்சர் பண்ணும் பாலா… வணங்கான் படப்பிடிப்பில் நடப்பது என்ன?
சென்னை : நடிகர் அருண் விஜய்யை பாலா, படாதபாடு படுத்தி டார்ச்சர் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் பாலா, நீண்ட நாட்களுக்கு பிறகு வணங்கான் படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார்.

இதில் சூர்யா நாயகனாக நடிக்க உள்ளதாகவும், இப்படத்தை 2-டி நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி கடந்தாண்டு படப்பிடிப்பு தொடங்கியது.
வணங்கான் : படப்பிடிப்பின் போது சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே சண்டை ஏற்பட்டதை அடுத்து வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார். வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகியதை அடுத்து, படத்தை கைவிட விரும்பாத பாலா, அருண்விஜய்யை வைத்து அப்படத்தை எடுத்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அருண்விஜய்யை பாலா படாதபாடுப்படுத்தி, டார்ச்சர் செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
அருண்விஜய்யின் மனக்குமுறல் : இது குறித்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சினிமா விமர்சகர் செய்யாறு பாலு, இயக்குநர் பாலா எப்படிப்பட்டவர், முந்தைய படங்களில் அவர் நடிகர்களை எப்படி படாதபாடு படுத்தினார் என்பது அருண்விஜய்க்கு தெரிந்துதான் பாலாவிடம் சென்றுள்ளார். நல்ல திறமை இருந்தும், அதை வெளிப்படுத்த சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையே என்ற மனக்குமுறல் அருண்விஜய்க்கு இருக்கு.

பாலா கொடுமைப்படுத்தினார் : வணங்கான் டிராப்பாகி சூர்யா அந்த படத்திலிருந்து விலகியதும், உடனடியாக பாலாவை சந்தித்து பேசியது அருண்விஜய் தான். நான் கடவுள் படத்தில் ஆர்யாவை பாலா கொடுமைப்படுத்தினார், அதேபோல அவன் இவன் படத்தில் விஷாலை மாறு கண்ணாக்கினார். அவரால் இன்று வரையும், அந்த கண் பிரச்சனையில் இருந்து மீண்டு வரவே முடியவில்லை. இதையெல்லாம் தெரிந்து தான் அருண்விஜய் பாலாவிடம் சென்று இருக்கிறார்.

கிழித்தக்கோட்டை தாண்டமாட்டார் : பாலா எவ்வளவு அடிச்சாலும் தாங்கக்கூடியவர் தான் அருண்விஜய், பாலாவுக்காக பல விஷயத்தை அடாப்ட் செய்யக்கூடியவராக அருண்விஜய் இருப்பதால், அருண் விஜய்யை பாலா படாதபாடு படுத்தி வருகிறார், டார்ச்சர் செய்கிறார் என்று வெளியாகும் தகவல் எல்லாம் வெறும் வதந்தி. மேலும், பாலா கிழித்தக் கோட்டை அருண்விஜய் தாண்டவேமாட்டார்.
ராசியில்லாத நடிகர் : அருண்விஜய் ஆரம்ப காலகட்டத்தில் அருண்குமார் என்ற பெயரில் தான் அறிமுகமானார். இவர் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்ததால், ராசியில்லாத நடிகர் என்று பேசப்பட்டார். அருண்விஜய்யின் குடும்பமே நட்சத்திர குடும்பம் என்பதால் அவரிடம் இல்லாத திறமையே இல்லை, இருந்தும் அவரால் ஜெயிக்க முடியவில்லை. அவர் தோல்வியில் துவண்டு இருந்த போது அஜித் தான் என்னை அறிந்தால் படத்தில் விக்டர் ரோலில் நடிக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்தார் என்று சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேட்டியில் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











