இவரிடம் குட்டோ, திட்டோ வாங்கினால் ரசிகர்கள் பாராட்டு நிச்சயம்: பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலா

By Siva

Recommended Video

இயக்குனர் பாலா பிறந்தநாள் இன்று- வீடியோ

சென்னை: வித்தியாசமான படங்கள் எடுப்பதற்கு பெயர் போன இயக்குனர் பாலாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் வந்து குவிகின்றது.

விக்ரம் நடிக்க வந்து பல ஆண்டுகளாக போராடிக் கொண்டிருந்தார். நம் நடிப்புத் திறமையை இந்த உலகிற்கு காட்டி பெயர் வாங்க முடியாதா என்று அவர் ஏங்கிய நேரத்தில் சேது படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் பாலா.

சேது படத்தை பார்த்து அசராதவர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு அருமையாக படத்தை எடுத்திருந்தார் பாலா.

பிறந்தநாள்

பிறந்தநாள்

நாம் பார்த்து பார்த்து இவர் இப்படித் தான் இதற்கு மேல் இவருக்கு நடிப்பு வராது என்று தீர்மானித்த நடிகர்களை கூட வித்தியாசமான கோணத்தில் காட்டி கைதட்டல்களை பெற்ற பாலா இன்று தனது 52வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பிரபலங்கள்

பாலா பல்லாண்டு வாழ வேண்டும் என்று திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர். எங்களுக்கு சீயானை தந்தவரே நீர் வாழ்க என்று விக்ரம் ரசிகர்கள் அவரை மனதார வாழ்த்தியுள்ளனர்.

த்ருவ்

விக்ரமுக்கு அடையாளம் கொடுத்த பாலா தற்போது அவரின் மகன் த்ருவின் சினிமா வாழ்க்கையை வர்மா படம் மூலம் துவங்கி வைக்கிறார்.

நடிப்பு

நடிப்பு

அடேங்கப்பா, இந்த நடிகர் அல்லது நடிகைக்கு இவ்வளவு நல்லா நடிக்க வருமா என்று பாலாவின் படங்களை பார்த்து ரசிகர்கள் வியப்பது உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உழைப்பு

உழைப்பு

பாலாவின் படத்தில் நடித்தால் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் அந்த கலைஞனுக்குள் இருக்கும் முழுத் திறமையையும் திரையில் காட்டி அவர்களுக்கு புதுப் பெயர் வாங்கிக் கொடுப்பவர் பாலா. பிறந்தநாள் வாழ்த்துக்கள் பாலா சார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X