என்ன கடைசியில் பாலா இவர் கூட படம் பண்ணுறாரா? அதுவும் ரீமேக்.. கேட்டா ஆடி போயிடுவீங்க!

Recommended Video

Director Bala Remake movie | Joseph | R.K.Suresh | ஹிட் படத்தை ரீமேக் செய்யும் பாலா

சென்னை: இயக்குனர் பாலா பிரபலமான மலையாள படம் ஒன்றை தமிழில் இயக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளியாகி வருகிறது.

இயக்குனர் பாலா கோலிவுட்டில் மீண்டும் ஒரு பிரேக்கிற்காக காத்து இருக்கிறார். கடந்த சில வருடங்களாக அவர் எடுத்த எந்த படமும் பெரிதாக வெற்றிபெறவில்லை. அதேபோல் விமர்சன ரீதியாகவும் வரவேற்பை பெறவில்லை.

நடிகர் விக்ரம் மகன் துருவ் அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்கில் நடித்துள்ளார். முதலில் அர்ஜுன் ரெட்டி படம் வர்மா என்ற டைட்டிலில் இயக்குநர் பாலா மூலம் எடுக்கப்பட்டது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் கடைசி நேரத்தில் இந்த படம் கைவிடப்பட்டது. படத்தின் அவுட் தயாரிப்பு குழுவிற்கு பிடிக்கவில்லை என்பதால் படம் கைவிடப்பட்டது. அதன்பின் மீண்டும் ஆதித்ய வர்மா என்ற பெயரில் இதே படம் எடுக்கப்பட்டது.

யார்

யார்

புது இயக்குனர் கிரி சய்யா இந்த படத்தை இயக்கினார். இது பாலாவிற்கு பெரிய ஏமாற்றமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பாலாவின் சினிமா கெரியரில் இது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ரீமேக்

ரீமேக்

இதையடுத்து பாலா மீண்டும் வேறு ஒரு ஹிட் படத்தை ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த படம்தான் ஜோசப். இப்படத்தில் ஜோஜு ஜார்ஜ் ஹீரோவாக நடித்திருந்தார்.

என்ன ஜோசப்

என்ன ஜோசப்

மிகவும் வித்தியாசமான ஜானரில் இந்த படம் உருவாக்கப்பட்டு இருந்தது. அதேபோல் இந்த படத்தின் பாடல்களும் பெரிய அளவில் ஹிட் அடித்தது. படத்தில் ஹீரோவிற்கு வயதான கெட்டப் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் யார்?

நடிகர் யார்?

இந்த நிலையில் ஜோசப் படத்தை தற்போது பாலா ரீமேக் செய்ய உள்ளார். பாலா இயக்கும் படத்திற்கும் ஜோசப் என்றே பெயர் வைக்க உள்ளனர். இதில் ஹீரோவாக நடிகரும், தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் நடிக்க உள்ளார். இவர் பில்லா பாண்டி படத்தில் ஹீரோவாக நடித்தார்.

தாரை தப்பட்டை

தாரை தப்பட்டை

அதேபோல் பாலாவின் இயக்கதில் வெளிவந்த தாரை தப்பட்டை படம் மற்றும் விஷாலின் மருது படம் ஆகிய படங்களிலும் இவர் நடித்து இருக்கிறார். தற்போது பாலாவின் படத்தில் முழு நேர ஹீரோவாக நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X