»   »  'காதலில் சொதப்புவது எப்படி' இயக்குநர்- மனைவி விவாகரத்து!

'காதலில் சொதப்புவது எப்படி' இயக்குநர்- மனைவி விவாகரத்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதலில் சொதப்புவது எப்படி, வாயை மூடி பேசவும், மாரி படங்களை இயக்கிய பாலாஜி மோகன், தனது மனைவி அருணாவை விவாகரத்து செய்து விட்டார்.

பாலாஜி மோகனும் அருணாவும் 2012 ஜூலையில் திருமணம் செய்தார்கள். பிறகு கருத்து வேறுபாடுகளால் பிரிந்து வாழ ஆரம்பித்தார்கள்.

Director Balaji Mohan divorced his wife

இந்நிலையில் இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில் பாலாஜி மோகன் தெரிவித்ததாவது:

என் நண்பர்கள், நலம் விரும்பிகள், ஊடக நண்பர்கள் என அனைவருக்கும் என் விவாகரத்து குறித்து கூற விரும்புகிறேன். அதனை நீங்கள் வதந்திகளாக அறிவதற்கு முன்னால்.

என்னுடைய முன்னாள் மனைவியுடன் கருத்துவேறுபாடுகள் காரணமாக 3 வருடங்கள் முன்பு பிரிந்துவிட்டேன். பிறகு இருவருடைய சம்மதத்தின் பேரில் விவாகரத்து மூலம் திருமண உறவு முறிந்துள்ளது. இதற்கான சட்டபூர்வ நடவடிக்கைகள் முடிவடைந்துவிட்டன.

இது ஒரு சுமுகமான பிரிவு. இருவரும் அவரவர் வழியில் சென்றுவிட்டோம். இது தொடர்பான எங்கள் தனிப்பட்ட உணர்வுகளை மதிப்பீர்கள் என எண்ணுகிறேன்," என்று கூறியுள்ளார்.

English summary
Kadhalil Sodhappuvathu Eppadi director Balaji Mohan has divorced his wife Aruna with mutual concern.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil