தனுஷூக்கு நோ... சித்தார்த்துக்கு யெஸ்... மாரி இயக்குநர் எடுத்த அதிரடி முடிவு
சென்னை : நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து மாரி மற்றும் மாரி2 படங்களை இயக்கியுள்ளார் பாலாஜி மோகன்.
இவர் அடுத்த படத்தையும் தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது இவர் அடுத்த படத்தை சித்தார்த்தை வைத்து எடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் சித்தார்த் தற்போது மகாசமுத்திரம், சைத்தான் கே பச்சா, டக்கர் மற்றும் இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து தேர்ந்தெடுத்த படங்களில் நடித்து வருகிறார். இவர் பாலாஜி மோகன் இயக்கத்தில் காதலில் சொதப்புவது எப்படி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இணையும் சித்தார்த்
இந்நிலையில் தற்போது மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் சித்தார்த் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஒய்நாட் ஸ்டூடியோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் விரைவில் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தனுஷ் பிசி
மாரி மற்றும் மாரி 2 என தனுஷை வைத்து அடுத்தடுத்த இரண்டு வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் பாலாஜி மோகன். இந்நிலையில் அடுத்த படத்தையும் அவர் தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தனுஷ் அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளதால், முன்னதாக சித்தார்த்தை வைத்து பாலாஜி மோகன் படம் இயக்கவுள்ளார்.
Recommended Video

அடுத்தடுத்த படங்களில் பிசி
தனுஷிற்கு மாரி மற்றும் மாரி 2 இரண்டு படங்களும் முக்கியமான படங்களாக அமைந்தன. இதையடுத்து அவர் அடுத்ததாக மீண்டும் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தற்போது டி43 உள்ளிட்ட படங்களில் தனுஷ் பிசியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











