Just In
- 10 min ago
இப்படியே போயிட்டிருந்தா எப்படி? 4 வது பாகத்துக்கும் சல்மான் ரெடியாம்...
- 18 min ago
பெட்டில் செம ஹாயாக போஸ் கொடுத்த பிக்பாஸ் பிரபலம்.. தீயாய் பரவும் போட்டோ.. விளாசும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
தமிழ்ல நான் பட்ட பாடு இருக்கே...ஐயையோ... விரக்தியில் ஹீரோயின்!
- 1 hr ago
பிரபல இந்தி நடிகை திடீர் மரணம்.. 80களில் மிரட்டியவர்.. அமிதாப் உட்பட உச்ச நடிகர்களுடன் நடித்தவர்!
Don't Miss!
- Automobiles
விலை குறைவான புதிய சொகுசு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மெர்சிடிஸ் பென்ஸ்!
- Technology
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கும் புதய சலுகை: 1095ஜிபி டேட்டா: என்ன திட்டம்? வேலிடிட்டி?
- News
வயலில் கிடந்த கவுசிகா சடலம்.. பைக்கில் மர்ம நபர்.. வீடியோ காலில் பேசியது யாருடன்.. பரபரக்கும் சேலம்
- Finance
28 நாளில் ரூ.104 கோடி வசூல்.. சபரிமலையில் கொட்டும் வருமானம்..!
- Lifestyle
காலை நேர உடற்பயிற்சி Vs மாலை நேர உடற்பயிற்சி - இரண்டில் எது சிறந்தது?
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பாலாஜி மோகன் சசிகாந்த் இனைந்து தயாரித்து இருக்கும் யோகிபாபுவின் ’மண்டேலா’
சென்னை : தமிழ் சினிமாவில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பலமுகங்களை கொண்டு செயல் பட்டு வரும் பாலாஜி மோகன், ஆரம்பத்தில் குறும்படங்களில் இருந்து தனது சினிமா கனவை துவங்கினார். குறும்படங்கள் மூலம் இயக்குநரான பாலாஜி மோகன் 'காதலில் சொதப்புவது எப்படி' படம் மூலம் இயக்குநரானார். .இதற்கு பிறகு சசிகாந்தின் ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் 'வாயை மூடி பேசவும்' படத்தை இயக்கினார். அதன் பின் மாரி 1 மற்றும் 2 படங்களை இதுவரையில் இயக்கி இருக்கிறார். இவர் ஹாட்ஸ்டாரில் வெளியான இனைய தொடரான 'ஆஸ் ஐயம் சவரிங் பிரெம் காதல்' தொடரை இயக்கி ,நடித்து தயாரித்தும் இருந்தார்.

தற்போது இவரின் வாயை மூடி பேசவும் தயாரிப்பாளரான சசிகாந்துடன் இனைந்து யோகி பாபுவின் மண்டேலா படத்தை தயாரித்து இருக்கிறார். பாலாஜி மோகனுக்கு 'மண்டேலா' படம் தான் சினிமாவில் முதல் தயாரிப்பு. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ளதாக பாலாஜி மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் . இவரின் தயாரிப்பு நிறுவனத்துக்கு 'ஓபன் வின்டோஸ் புரடக்ஸன்' என்று பெயரிட்டுள்ளார் .மண்டேலா படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார் .

மண்டேலா என்பவர் மிக பெரிய போராட்ட தலைவர். தென் ஆப்ரிக்காவில் பிறந்து ஆங்கிலேய காலனி ஆதிகத்துக்கு எதிராக பேராடி சுமார் 27 ஆண்டுகள் சிறைக்கு சென்றவர் மண்டேலா. சிறையில் இருந்து வந்த மண்டேலா சில வருடங்கள் தென் ஆப்ரிக்காவின் குடியரசு தலைவராக பணிபுரிந்தார். பிறகு 5 டிசம்பர் 2013ல் காலமானார். இவரின் பெயரை படத்திறக்கு தலைப்பாக வைத்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வையில் யோகிபாபுவின் தலைமுடி மற்றும் அதை வெட்டும் கத்திரி சீப்பை வைத்திருந்தனர். இதை வைத்து பார்க்கும் போது யோகி பாபு படத்தில் முடிவெட்டுபவராக நடிக்கிறார் என்பது தெரிகிறது.

ஒரு காமெடியனாக வலம் வந்து கொண்டிருப்பவர்களுக்கு கதாநாயகன் வாய்ப்பு கிடைப்பது சினிமாவில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒன்றுதான். இது நாகேஷ், வடிவேலு, சந்தானம் என அனைவருக்கும் நடத்திருக்கிறது.தற்போது யோகி பாபுக்கும் இது நடந்து வருகிறது. யோகி பாபு தர்மபிரபு மற்றும் கூர்கா படங்களில் இதற்கு முன்பே கதாநாயகனாக நடித்து விட்டார். மண்டேலா இவர் ஹீரோவாக நடிக்கும் மூன்றாவது படமாகும்.
