மீண்டும் ஒரு சோகம்.. இயக்குநர் பாலாஜி சக்திவேலின் தந்தை காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்

சென்னை: காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 உள்ளிட்ட படங்களின் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் காலமானார். அவருக்கு வயது 84.

இயக்குநர் ஷங்கரின் உதவி இயக்குநராக சினிமா வாழ்க்கையை தொடங்கியவர் பாலாஜி சக்திவேல்.

நல்ல கதைகளை படமாக்கி பாராட்டுக்களை அள்ளிய பாலாஜி சக்திவேல் நடிகராகவும் வலம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலாஜி சக்திவேலின் தந்தை காலமானார்

பாலாஜி சக்திவேலின் தந்தை காலமானார்

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை சக்தி வடிவேல் இன்று உடல் நலக் குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 84. சென்னை ராமாபுரத்தில் உள்ள இயக்குநர் பாலாஜி சக்திவேலின் இல்லத்தில் உயிர் நீத்த சக்தி வடிவேலுக்கு போரூர் மயானத்தில் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

ஷங்கர் சிஷ்யன்

ஷங்கர் சிஷ்யன்

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல். ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான பாலாஜி சக்திவேலின் காதல் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை படைத்தது. ஆனால், காதல் படத்திற்கு முன்னதாகவே இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்குநராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் படம்

முதல் படம்

கடந்த 2002ம் ஆண்டு வெளியான சியான் விக்ரமின் சாமுராய் படம் தான் இயக்குநர் பாலாஜி சக்திவேலின் முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சாமுராய் படத்தில் விக்ரம் போட்ட மெனக்கெடலை பார்த்து தான் இயக்குநர் ஷங்கர் அந்நியன் படத்திற்கே சியான் விக்ரமை ஒப்பந்தம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொன்னியின் செல்வன் படத்தில்

பொன்னியின் செல்வன் படத்தில்

காதல், கல்லூரி, வழக்கு எண் 18/9 என அடுத்தடுத்து சிறந்த படங்களை இயக்கிய இயக்குநர் பாலாஜி சக்திவேல் அசுரன், வானம் கொட்டட்டும் உள்ளிட்ட படங்களில் நடிகராக நடித்துள்ளார். விரைவில் வெளியாக உள்ள மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும் இவர் நடிகராக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் இரங்கல்

பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவரான பாலாஜி சக்திவேலின் தந்தை காலமான செய்தியை அறிந்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தந்தையின் மறைவால் வாடி வரும் இயக்குநர் பாலாஜி சக்திவேலுக்கு பிரபலங்கள் ஆறுதல் கூறி உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X