Vanangaan: வணங்கான் டீசருக்கு தேதி குறிச்சாச்சு... எப்போது ரிலீஸ் தெரியுமா?

சென்னை: வித்தியாசமான கதைகளை இயக்கி வரும் பாலா இதுவரை சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள், அவன் இவன் உள்ளிட்ட பல படங்களை இயக்கி உள்ளார். தற்போது இவர். வணங்கான் என்ற படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில், ரோஷினி பிரகாஷ் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் டீசர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

நடிகர் சூர்யா பாலாவின் இயக்கத்தில் நந்தா, பிதாமகன் படங்களில் நடித்திருந்தார். இந்த இரண்டு படங்களுமே சூர்யாவின் சினிமா பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா மூன்றாவது முறையாக பாலாவுன் கை கோர்த்தார். தனது 2டி நிறுவனம் சார்பில் வணங்கான் திரைப்படம் தொடங்கப்பட்டது. கன்யாகுமரியில் பல மாதங்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்பின் போது அடிக்கடி பாலா சூர்யாவிற்கு இடையே சண்டை என சினிமா வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபட்டு வந்தன.

director balas vanangaan movie teaser will be released in february 19th

ஆனால், இருவருக்கும் நடுவே எந்த பிரச்சனையும் இல்லை என்று சொல்லிக்கொண்டு வந்த நிலையில், கடைசியில் மனம் நொந்துப்போன சூர்யா வணங்கான் படத்தில் இருந்து தானும் தனது நிறுவனமும் கூடவே ஹீரோயின் கீர்த்தி ஷெட்டியும் விலகுவதாக அறிக்கை வெளியிட்டு விலகினார். விலகுவதற்கான எந்த காரணம் இந்த அறிக்கையில் இல்லை.

பாலாவின் வணங்கான்: இதையடுத்து, வணங்கான் படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு தயாரிப்பு நிறுவனத்தை தேடி அலைந்த பாலாவிற்கு விஹவுஸ் புரொடக்சன்ஸ் மற்றும் பி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனங்கள் கை கொடுத்தன. இதையடுத்து இந்த படத்தில் சூர்யாவிற்கு பதில் அருண் விஜய் கமிட் ஆனார். இதையடுத்து கடந்த ஆண்டு வணங்கான படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதில் உடல் முழுவதும் சேறுடன் காணப்பட்ட அருண் விஜய், ஒரு கையில் பெரியாரையும் மறுகையில் பிள்ளையாருடன் ஆக்ரோஷமாக காணப்பட்டார். இந்தப் போஸ்டரின் மூலம் பாலா எதை சொல்ல வருகிறார் என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

டீசர் அப்டேட்: மேலும், இந்த படத்துத் க்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஆர்.ர்பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார்.ர சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, வணங்கான்' திரைப்படத்தின் டீசர் வருகிற 19ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அருண்விஜக்கு கம்பேக்: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கே வணங்கான் படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் எதிர்பார்த்த படி வெளியாகவில்லை. சினிமாவில் தனக்கான அங்கீகாரத்தை தேடும் அருண் விஜய் வணங்கான் திரைப்படம் ஒரு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தை பாலா மார்ச் மாதம் வெளியிடும் முடிவில் பாலா கோடம்பாக்கத்தினரிடையே பேச்சு அடிபட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X