Don't Miss!
- News
அடிக்கடி குலுங்கும் டெல்லி! நிலநடுக்கம் திடீரென அதிகரிக்க என்ன காரணம்! தமிழ்நாட்டின் உண்மை நிலை என்ன
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. நியூசி,-ன் அதிவேக பவுலரை அசால்ட் செய்த சுப்மன் கில்.. வாயடைத்துப்போன ரோகித்
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 வரை இந்த 4 ராசிக்கு பிரச்சனை மேல பிரச்சனை வரும்... கவனமா இருங்க..
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Finance
என் இதயமே கனத்து விட்டது.. 8 மாத கர்ப்பிணி பெண் கூகுள் பணி நீக்கம் குறித்து கலக்கம்.. !
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
பாலிவுட் இயக்குநர் ரஜினியுடன் சந்திப்பு... ரஜினி-இளையராஜா -பால்கி கூட்டணியில் புதிய படம்?
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார்.
உடல்நல பாதிப்பு காரணமாக தற்போது அவர் ஓய்வில் உள்ளார். அவரது அடுத்த படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு நிலவுகிறது.
பீஸ்ட் இயக்குநருக்கு அசிஸ்டன்ட் டைரக்டராக ஒரு சூப்பர் சான்ஸ்.. அவரே போட்ட ட்வீட்டை பாருங்க!
இந்நிலையில் சமீபத்தில் பாலிவுட் இயக்குநர் பால்கி ரஜினியை சந்தித்து ஒரு கதையை சொல்லி ஓகே வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர்ஸ்டார் ரஜினி
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தனது 71வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவரது பிறந்தநாள் சிறப்பான கொண்டாட்டத்துடன் அமைந்திருந்தது. குடும்பத்தினருடன் அவர் தனது பிற்நதநாளை கொண்டாடி அதன் புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

ரஜினி பிறந்தநாள்
அவரது பிறந்தநாளை ட்விட்டர் ட்ரெண்டாக்கியது. பிரதமர், முதல்வர் என வாழ்த்துக்கள் பறந்தன. ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். முன்னதாக தீபாவளியையொட்டி வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியும் இந்த பிறந்தநாளுடன் சேர்ந்துக் கொண்டது.

மருத்துவமனையில் சிகிச்சை
ஆனால் படத்தின் ரிலீசுக்கு முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெற்றார். அவரது உடல்நலம் தேற பல்வேறு பிரார்த்தனைகளை ரசிகர்கள் நிறைவேற்றினர். ஆனால் தொடர்ந்து அண்ணாத்த படம் ரிலீசாகி சிறப்பான வெற்றியை பெற்றது.

அண்ணாத்த படம்
அண்ணன் -தங்கை பாசத்தை மையமாக கொண்டு சிவா இயக்கியிருந்த இந்தப்படம் பேமிலி ஆடியன்சை வெகுவாக கவர்ந்தது. படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூலில் சாதனை புரிந்துள்ளதாக தயாரிப்புத் தரப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு
இந்தப் படத்தின் சிறப்பான வெற்றியை அடுத்து தற்போது ரஜினியின் அடுத்தப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மீண்டும் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாகவும் சவுந்தர்யா ரஜினிகாந்த் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரஜினியுடன் பால்கி சந்திப்பு
மேலும் பல இயக்குநர்களுடன் கதை குறித்து ரஜினி பேசியுள்ளதாகவும் புதிய இயக்குநர்களுடன் ரஜினி இணைந்து படம் செய்யவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட் இயக்குநர் பால்கி சமீபத்தில் ரஜினியை சந்தித்து கதை விவாதத்தில் ஈடுபட்டதாகவும் அவர் கூறிய கதை ரஜினிக்கு பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இளையராஜா இசை?
இந்தக் கூட்டணி இணைந்தால் அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இளையராஜா -ரஜினி கூட்டணி இறுதியாக வீரா படத்தில் இணைந்த நிலையில் தற்போது இந்த புதிய படத்தில் ரஜினியுடன் இணைந்து இளையராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுவது சிறப்பாக பார்க்கப்படுகிறது.
Recommended Video

பால்கி படத்தில் இளையராஜா
தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட பால்கி இயக்கியுள்ள பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா தான் இசையமைத்துள்ளார். எனவே பால்கி -ரஜினி கூட்டணி உறுதியானால் அந்தப் படத்திற்கு இளையராஜாதான் இசையமைப்பார் என்று உறுதியாக எதிர்பார்க்கலாம்.