twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சண்முகமணி.. நம்ம பாக்யராஜுக்கு இன்னிக்கு பிறந்த நாள்.. வாழ்த்தியாச்சா!

    |

    சென்னை : நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பன்முக தன்மை கொண்ட கே.பாக்யராஜ் அவர்களுக்கு இ‌ன்று பிறந்த நாள்.

    தமிழ் சினிமா மிக பெரிய உயரத்தை அடைய சில இயக்குனர்களின் பங்கு மிக முக்கியமானது. அதில் மிக முக்கியமான இயக்குனர் கே.பாக்யராஜ் என்று சொல்லலாம். இயக்குனர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றி அதன் பின் இயக்குனர் ஆனவர். அதற்கு பிறகு சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குனராகி தமிழ் சினிமாவை தன் வசப்படுத்தி மிக பெரிய உச்சத்தை அடைந்தார்.

    director bhagyaraj birthday

    கே.பாக்யராஜ் அவர்களின் பிறந்தநாள் ஜனவரி 7ம் தேதி ஆகும்.இவர் இதுவரை 25 படங்கள் வரை இயக்கி இருக்கிறார் .60ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார் . பாக்யராஜ் என்றவுடன் தமிழ் சினிமா மக்களுக்கு சட்டென்று தோனுவது எந்த விதத்திலும் சலிப்பு தட்டாத திரைக்கதை தான் .கே.பாக்யராஜ் படங்களின் திரைக்கதை என்பது அந்த காலத்திற்கு ஏற்ப காமெடி,சண்டை,குடும்ப உணர்வு , கற்பனை ஆகியவை கலந்த ஒரு சிறந்த மசாலா படமாகதான் இருக்கும் .இதனாலே பாக்யராஜ் படம் என்றாலே குடும்பம் குடும்பமாக மக்கள் வந்து பார்பார்கள் .

    உலகையே உலுக்கிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ.. ரியல் ஹீரோவாக மாறிய அவெஞ்சர்ஸ் ஹீரோ!உலகையே உலுக்கிய ஆஸ்திரேலிய காட்டுத் தீ.. ரியல் ஹீரோவாக மாறிய அவெஞ்சர்ஸ் ஹீரோ!

    பாக்யராஜ் தனது படங்களை இயக்குவதை அடுத்து பல படங்களில் நடித்தும் இருக்கிறார் மேலும் பல படங்களுக்கு கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார் சில படங்களை தயாரித்தும் இருக்கிறார்.பாக்யராஜ் முதலில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றும் போது அவரின் படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தும் இருக்கிறார். அதனால் தன் முதல் படத்தை இயக்கும் போதும் தானே கதாநாயகனாக நடித்து எளிதில் மக்களை சென்று சேர்ந்து விட்டார் .

    director bhagyaraj birthday

    70களின் இறுதியில் 80களின் ஆரம்பத்திலும் அதிக ஆதிக்கம் செலுத்திய இயக்குனர்கள் இயக்கிய படங்கள் ஆக்சன் படங்களாக தான் இருக்கும் அதை தாண்டி மாறுபட்ட சினிமாக்களை மஹேந்திரன் மற்றும் பாலுமகேந்திரா கொடுத்து வந்தார்கள். அந்த சமயத்தில் எண்டர்டெயினிமன்ட் படங்கள் என்றால் அது பாக்யராஜ் படங்கள் மட்டும் தான். அந்த காலங்களில் வெற்றி பெற்ற படங்களின் ரைட்ஸ் பலரும் வேற்று மொழிகளுக்கு விற்கும் வழக்கம் உண்டு ஆனால் பாக்யராஜின் பல படங்கள் வெளியாவதற்கு முன்பே ரைட்ஸ் விற்ற வரலாறு எல்லாம் உண்டு இதனை பாக்யராஜ் சமீபத்திய விழாவில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    director bhagyaraj birthday
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X