For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வறுமை + நோய்.. ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் பாக்யராஜ் சிஷ்யன்... உதவி கேட்டு உருக்கம்!

|
Actor Nandhagopal: ஒருவேளை சாப்பாட்டுக்கே வழியில்லை..கஷ்டப்படும் பாக்யராஜ் சிஷ்யன் நடிகர் நந்தகோபால்

சென்னை: இயக்குனர் பாக்யராஜின் சிஷ்யன் நடிகர் நந்தகோபால், வறுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

கே.பாக்யராஜ் இயக்கி நடித்த படங்களில் முக்கியமான படம் சுந்தரகாண்டம். அந்த படத்தில் நமசிவாயம் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் நந்தகோபால். சில காட்சிகளே வந்தாலும், 'டேய்... சண்முகமணி' என டயலாக் பேசி அனைவரையும் சிரிக்க வைத்தவர்.

அப்படம் மட்டுமின்றி ராசுக்குட்டி உள்பட பாக்யராஜின் பல படங்களில் அவர் நடித்துள்ளார். அருணாச்சலம் படத்தில் ரஜினியுடனும் சேர்ந்து நடித்துள்ளார். அப்போது ரஜினியே இவரது நடிப்பை பாராட்டியுள்ளார்.

அன்று அனைவரையும் சிரிக்க வைத்த நந்தகோபால், இன்று ஒரு வேளை சாப்பாட்டிற்காக தவியாய் தவித்துக்கொண்டிருக்கிறார். சினிமாவில் உள்ளவர்களின் வாழ்க்கையில் இதுபோல் பட்டினி கிடப்பது சகஜம் தான். ஆனால் நந்தகோபாலின் நிலைமை மிகவும் பரிதாபத்துக்கு உரியது.

நீரிழிவு பாதிப்பு:

நீரிழிவு பாதிப்பு:

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நந்தகோபால், சென்னை கோடம்பாக்கம் ராம் தியேட்டர் அருகில் உள்ள வீட்டில், கவனிக்க ஆள் இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார். கால்கள் இரண்டும் நீர்கோர்த்து, வீங்கி இருப்பதால் அவரால் நடக்க முடியாது. எனவே தனது வேலைகளைக்கூட செய்ய முடியாத நிலையில் தான் இருக்கிறார் நந்தகோபால்.

உதவி தேவை:

உதவி தேவை:

இப்போது அவருடைய ஒரே கோரிக்கை, யாராவது தனக்கு நிதியுதவி செய்து, கேர்டேக்கர் ஒருவரை நியமித்தால், தான் உயிரோடு இருக்கும் வரை உதவியாக இருக்கும் என்பதே. இப்போதும் அதே வெள்ளந்தி சிரிப்புடன் கேட்கிறார் 'நமசிவாயம்' நந்தகோபால். 47 வயதாகும் நந்தகோபால் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. தனது அக்கா - மாமா வீட்டில் தான் தங்கியிருக்கிறார். பட வேலைகள் எதுவும் இல்லாததால், ஒருவேளை சாப்பாட்டிற்கே சிரமப்பட்டு வருகிறார்.

உதவி செய்வதாக உறுதி:

உதவி செய்வதாக உறுதி:

கடந்த 23ம் தேதி நடந்த நடிகர் சங்கத் தேர்தலில் வாக்களிக்க நந்தகோபால் அழைத்துவரப்பட்டார். அப்போது தான் அவருடைய நிலைமை பலருக்கும் தெரியவந்தது. அவருடன் நடித்த பல நடிகர்கள், பரிதாபப்பட்டு தங்களால் முடிந்த உதவியை செய்வதாக உறுதியளித்துள்ளனர்.

குளிர் காய்ச்சல்:

குளிர் காய்ச்சல்:

எப்படி உடல்நலக்குறைவு ஏற்பட்டது என நாம் கேட்டபோது, "நானே இயக்கி நடிக்கும்படியாக ஒரு கதை தயார் செய்து வைத்திருந்தேன். தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டார். அந்த நேரத்தில் தான் குளிர்காய்ச்சல் வந்து, பிறகு நடக்கவே முடியாதபடி ஆகிவிட்டது", என்கிறார் நந்தகோபால்.

மருத்துவ உதவி தேவை:

மருத்துவ உதவி தேவை:

இப்ப உங்களுடைய தேவை என்ன என கேட்டதற்கு, "இப்போது என்னுடைய தேவை மருத்துவ உதவி தான். நடிகர் சங்கமோ, அல்லது வேறு நடிகர்களோ எனக்கு மருத்துவ உதவி செய்தால் நன்றாக இருக்கும். உடல் சரியானதும், நானே எனது வேலைகளை பார்த்துக்கொள்வேன்", என பரிதாபமாக பேசுகிறார் நந்தகோபால்.

இது அழகல்ல:

இது அழகல்ல:

உதவிகள் உரிய நேரத்தில் செய்யப்பட்டால் அதற்கு மதிப்பு. பின் காலம் கடந்து வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை. நம்மை சிரிக்க வைத்த கலைஞரை அழ விடுவது அழகல்ல. நந்தகோபாலின் இந்த கோரிக்கைகள் உரியவர்களின் காதுகளுக்கு சென்று சேர்ந்து, உடனடியாக அவருக்கு உதவிகள் கிடைத்திட வேண்டும் என்பது தான் நமது பிரார்த்தனையும்.

English summary
Director Bhagyaraj's assistant actor Nandhagopal, who acted in Sundarakandam movie, is now suffering in poverty.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more