twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Flashback : சுவர் இல்லாத சித்திரங்கள்… இன்றும் உயிர் வாழும் ஓர் காவியம்!

    |

    Flashback : கே.பாக்கியராஜ் இயக்கத்தில் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய, சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தை பற்றித்தான் ப்ளாஷ் பேக் பகுதியில் நாம் பார்க்க இருக்கிறோம்.

    1979ம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தில் சுதாகர், கே.பாக்யராஜ், சுமதி, கவுண்டமணி, எஸ்.வரலட்சுமி, காந்திமதி, கல்லாப்பெட்டி சிங்காரம், சிஆர் சரஸ்வதி என ஏராளமான நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

    மேலும் இப்படத்திற்கு கங்கை அமரன் இசையமைத்து இருந்தார்.கோபிநாத் தயாரித்திருந்தார்.

    இயக்குனர்

    இயக்குனர்

    இயக்குனர்களில் பாக்யராஜின் பாணி தனித்துவமானது என்பது எல்லோரும் அறிந்த உண்மை. அழகான திரைக்கதை அமைப்பும் அந்தத் திரைக்கதைக்கேற்ற பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்துத் திறமையாகப் பயன்படுத்துவதிலும் பேர்போனவர் பாக்கியராஜ் இப்படத்தில் கதாபாத்திரத்தை கதைக்கு ஏற்றவாறு தேர்வு செய்து இருப்பார். படத்திற்கு அதுதான் பிளஸ்.

    வறுமை, பசி, காதல்

    வறுமை, பசி, காதல்

    வறுமை, பசி, காதல், மானம் அனைத்தையும் ஒருங்கிணைந்த ஒரு திரைப்படம் தான் சுவர் இல்லாத சித்திரங்கள். இத்தனை அழகான காதலா, காதலில் இத்தனை தெய்வீகமா என்று நினைக்கத் தோன்றுகிறது. காதலிக்காக பணக்கார வாழ்வை விட்டு பசிபட்டினியோடு போராடும் சுகாதரனின் கதாபாத்திரமும், மானம் தான் முக்கியம் என்ற சுமதியின் கதாபாத்திரமும் அழுத்தம் நிறைந்ததாக இருந்தன.

    உணர்வு பூர்வமான காட்சி

    உணர்வு பூர்வமான காட்சி

    தன்னை விரும்பாத காதலிக்காக வீட்டில் திருடி பணம் கொடுத்து உதவியதும், ஒரு கட்டத்தில் தன்னுடைய வாழ்க்கையையே தியாகம் செய்து அந்த பெண்ணுக்கு உதவியதும் எத்தனை உணர்வு பூர்வமான காட்சி. இப்படி ஒரு காட்சியை பாக்யராஜ் அவர்களால் தான் கொடுக்க முடியும்.

    காதல் வைபோகமே

    காதல் வைபோகமே

    இளையராஜா இசையமைத்தால், படம் நிச்சயம் வெற்றிப்பெறும் என்ற எண்ணத்தை உடைத்தெறிந்து அவரின் உதவியின்றி மற்ற இசையமைப்பாளர்களோடு கைகோர்த்தார். பாக்யராஜின் படங்களில் பாடல்கள் யார் இசையமைத்தாலும் சோடை போனதேயில்லை என்பதை நிரூபித்தார். அதே போல இப்படத்திற்கும் கங்கை அமரன் இசையமைத்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற காதல் வைபோகமே இன்று ஒரு ஸ்பெஷல் பாடலாகவே உள்ளது.

    முத்திரையை பதித்தார்

    முத்திரையை பதித்தார்

    இப்படத்தில் கவுண்டமணி சரோஜா என்று கூப்பிடும் போதும், குப்ப கொட்டுறிய கொட்டு கொட்டு என்று சொல்லும் இடத்திலும். அட கவுண்டமணி... கவுண்டமணி தான் என்று சொல்லவைக்கிறது. இப்படத்தில் டெய்லர் கடைக்காரராக வரும் கவுண்டமணி படம் நெடுகிளும் தன் தடத்தை பதித்து இருப்பார்.

    உயிர்வாழும் ஓர் காவியம்

    உயிர்வாழும் ஓர் காவியம்

    பாக்யராஜ் இயக்கிய முதல் திரைப்படம் இதுவாகும். இப்படம் எப்போது பார்த்தாலும் விழியோரம் நீர் கசியத்தான் செய்கிறது. காதல் தெய்வீகமானது, பசி கொடுமையானது, அதைவிட மானம் மேலானது என்பதை ஒரு திரைப்படமாக எடுத்து முதல் படத்திலேயே முத்திரை பதித்தார். வருடங்கள் பல கடந்தும் இன்றும் உயிர்வாழும் ஒர் காவியமாக உள்ளது சுவர் இல்லாத சித்திரங்கள்.

    English summary
    Director Bhagyaraj’s Suvarilladha Chithirangal Flashback
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X