வீட்டை விட்டு சென்ற மகள் கர்ப்பம் வேற ஆகிட்டா.. ஜீரணிக்கவே முடியல.. பாக்யராஜ் கொடுத்த ஷாக்
சென்னை: இந்திய சினிமாவில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது ஒவ்வொரு படமும் இப்போது பார்த்தாலும் ரசிகர்களுடன் கனெக்ட் ஆகும் சிறப்புடையவை. காமெடி, எமோஷன் என பக்காவாக அவர் ஒரு படத்தை உருவாக்கியதால்தான் அதிக வெள்ளிவிழா கண்ட இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்துகொண்டிருக்கிறார். அவருக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சரண்யா பாரிஜாதம் படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரையுலகில் திரைக்கதை மன்னன் என்று புகழப்படுபவர் பாக்யராஜ். அவரது திரைப்படங்களை பார்க்கையில் ஒரு காட்சியில்கூட சலிப்பு தட்டாமல் மொத்த ரசிகர்களும் அந்த கதைக்குள் சென்றுவிடும் மாயத்தை தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் விடாமல் செய்துகொண்டே வந்தவர் அவர். அதனால் அவருக்கென்று இன்றுவரை பலரும் ரசிகர்களாக இருக்கின்றனர்.

சலிக்கவே சலிக்காது: பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக இருந்து அவரது பல படங்களுக்கு தூணாக இருந்திருக்கிறார் பாக்யராஜ். பாரதிராஜா இயக்கி சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள் உள்ளிட்ட படங்களுக்கு கதையையும் எழுதியிருக்கிறார் அவர். இதனையடுத்து சுவரில்லாத சித்திரங்கள் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் முதல் படத்திலேயே தனது கதையாலும் திரைக்கதையாலும் கவனிக்கப்படும் இயக்குநராக மாறினார்.
வரிசையாக ஹிட்டுகள்: சுவரில்லாத சித்திரங்கள் படத்துக்கு பிறகு அவர் இயக்கிய ஒரு கை ஒரு ஓசை, மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, விடியும்வரை காத்திரு, அந்த ஏழு நாட்கள், தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, தாவணி கனவுகள், சுந்தரகாண்டம், ராசுக்குட்டி என அவர் இயக்கிய அத்தனை படங்களுமே ஹிட்டடித்தன. அவரது ஸ்பெஷாலிட்டி என்னவென்றால் ஏ செண்டர், பி செண்டர், சி செண்டர் என அத்தனை செண்டர்களிலும் பாக்யராஜுக்கென்று ரசிகர்கள் இருந்தனர்.
பாக்யராஜ் குடும்பம்: இதற்கிடையே பாக்யராஜின் முதல் மனைவி உடல்நல குறைவால் உயிரிழந்துவிட்டார். அதனையடுத்து நடிகை பூர்ணிமாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் பாக்யராஜ். அவர்களுக்கு சாந்தனு என்ற மகனும், சரண்யா என்ற மகளும் இருக்கிறார்கள். சாந்தனு தமிழ் சினிமாவில் அடையாளப்பட்ட நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். சரண்யாவோ பாரிஜாதம் என்ற படத்தில் மட்டும் நடித்திருந்தார்.
அதிர்ச்சி கொடுத்த சரண்யா: சூழல் இப்படி இருக்க அண்மையில் பேட்டி கொடுத்த சரண்யா தனக்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதாக கூறினார். ஆனால் கணவர் யார் என்று சொல்லவில்லை. அதேசமயம் அவரை அவரது கணவர் ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் பல தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருந்தன. அதுமட்டுமின்றி மூன்று முறை தற்கொலை முயற்சி செய்ததாகவும் ஒரு தகவல் ஓடியது. இந்நிலையில் அந்த விவகாரம் குறித்து பாக்யராஜ் பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
பாக்யராஜ் பேட்டி: அவர் அளித்த ஒரு பேட்டியில், "என் மகளின் காதலை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. சாதி, மதம், பணம் என அனைத்தையும் கடந்த ஒரு காரணம் இருந்தது. என மகள் வீட்டை விட்டு சென்றாள். நாங்களும் கோபத்தில் அப்படியே இருந்தோம். ஆனால் அவர் கர்ப்பம் ஆகிவிட்டேன் என்று சொன்னதும் எங்களால் தாங்க முடியவில்லை. அதற்கு பிறகு பூர்ணிமா சென்றார். பையன் பிறந்திருக்கான் என்று சொன்னவுடன் நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்தேன். பிறகு சேர்ந்துவிட்டோம். இப்போது அவனை பார்க்காமல் என்னால் இருக்கவே முடியாது" என்றார்


Click it and Unblock the Notifications











