twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மீண்டும் எழுவோம்.. டோட்டல் லாக்டவுனை படமாக்கிய தனுஷ் பட இயக்குநர்.. பரத் பாலா பேட்டி!

    |

    சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் போடப்பட்ட லாக்டவுனை தனுஷின் மரியான் படத்தை இயக்கிய இயக்குனர் பரத்பாலா 'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் ஆவணப்படுத்தி உள்ளார்.

    Recommended Video

    DIRECTOR BHARAT BALA EXCLUSIVE TALK | மீண்டும் எழுவோம் | V-CONNECT | Filmibeat Tamil

    ஒவ்வொரு முறையும் இந்தியாவை புதிய கோணத்தில் காட்சியமைத்து பதிவு செய்யும் இயக்குனர் பரத்பாலா, ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து 'வந்தே மாதரம்', 'ஜன கன மன', மேலும் ஜியோ உடோ படோ ஜீதோ, காமன்வெல்த் விளையாட்டுகளுக்கான அதிகாரப்பூர்வ காணொலி உள்ளிட்டவற்றை உருவாக்கியவர்.

    Director Bharat Bala talks about his Total Lockdown documentary film

    'மீண்டும் எழுவோம்' என்ற பெயரில் 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகை கொண்ட ஒரு நாடு தன்னைத் தானே லாக்டவுன் படுத்திக் கொண்ட அற்புத தருணங்களை ஆவணப்படுத்தி உள்ளார்.

    சுமார் 117 பேரை 15 குழுக்களாக பிரித்து, இதுவரை பார்த்திராத டோட்டல் லாக்டவுனை தங்கள் கேமராக்களில் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் அடுத்த தலைமுறை, கண்ணுக்குத் தெரியாத நோய் தொற்றால் இந்தியா எப்படி ஸ்தம்பித்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும்.

    14 மாநிலங்களில் பல்லாயிரம் கிலோ மீட்டர் பயணித்து படம்பிடித்த காட்சிகளை இந்த குழு ஒருங்கிணைத்துள்ளது. வாட்ஸ்-அப் வீடியோ கால், ஜும் செயலி உள்ளிட்ட தொழில்நுட்ப வாயிலாக பரத்பாலாவை தொடர்பு கொண்டு இதை படமாக்கியுள்ளனர்.

    காதலனுடன் லிப்லாக்.. ஜாக்கி ஷெராஃப் மகள் பகிர்ந்த புகைப்படம் !காதலனுடன் லிப்லாக்.. ஜாக்கி ஷெராஃப் மகள் பகிர்ந்த புகைப்படம் !

    தெளிவாக தெரிந்த இமய மலை, கங்கை நீரின் ஆழத்தில் இருந்த கூழாங்கல் மாசு ஏதும் இன்றி தெரிந்த அதிசயம், இரைச்சல் இல்லாத நெடுஞ்சாலைகள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் அடங்கிக் கிடக்கும் மக்கள், எப்போதுமே கூட்டமாக, நெரிசலாக காணப்படும் ஒட்டுமொத்த இந்தியாவும் ஒருமித்த அமைதியுடன் இருக்கும் அரிய நிகழ்வை மார்ச் 26ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையில் எடுத்து அண்மையில் வெளியிட்டது குறித்து இயக்குநர் பரத் பாலா விளாவரியாக நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டுக்கு அளித்துள்ள பேட்டியில் கண்டு மகிழுங்கள்!

    English summary
    Director Bharat Bala talks about his Kashmir to Kanyakumari Lockdown documentary film experience in our recent interview.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X