கோபப்பட்ட கமல்.. மன்னிப்பு கேட்ட ரஜினிகாந்த்.. என்ன நடந்தச்சு.. இயக்குநர் பாரதி கண்ணன் பளிச்!
சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர் பாரதி கண்ணன். இவரது இயக்கத்தில் வெளியான ஸ்ரீ ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ பண்ணாரி அம்மன் போன்ற படங்கள் அவருக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள். உதவி இயக்குநராக தனது திரை வாழ்க்கையைத் தொடங்கிய அவர், பின்னர் நடிகர், இயக்குநர், சின்னத்திரை நடிகர், விநியோகஸ்தர் என பல அடையாளங்களுடன் உள்ளார். இந்நிலையில் இவர் சமீபத்தில் Touring Talkies யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் குறித்து தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது அந்த பேட்டியில் அவர் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசனுடன் விநியோகஸ்தராக அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதாவது, இவர் ரஜினிகாந்தின் பாண்டியன் மற்றும் கமல்ஹாசனின் குணா போன்ற படங்களை வாங்கி, திருநெல்வேலி ஏரியா விநியோகஸ்தராக செயல்பட்டார். இதில் இந்த இரண்டு படங்களுமே அவருக்கு லாபத்தைக் கொடுக்கவில்லை. இந்நிலையில் பாண்டியன் படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த பின்னர் ரஜினிகாந்த்தைச் சென்று சந்தித்து, படம் சரியாக போகவில்லை. படத்தால் தனக்கு லாபமில்லை என்று கூறியுள்ளார்.

ரஜினி மன்னிப்பு: இதைக்கேட்ட் ரஜினிகாந்த், " பாண்டியன் படம் சரியா போகல தானே. படம் கொஞ்சம் பழைய கதையா போச்சு. கம்மியான விலைக்கு தான் உங்களுக்கு கொடுக்கச் சொன்னேன். நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் அப்படி சொன்னேன். மன்னிச்சுக்கோங்க என கூறியதாக கூறியுள்ளார். மேலும் ரஜினிகாந்த்தைப் பொறுத்தவரையில் ஒரு படம் ஓடவில்லை என்றால் ஓடவில்லை என்று ஒத்துக் கொள்வார். பணத்தை திருப்பிக் கொடுத்து விடுவார். அது தான் தயாரித்த படமாக இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி.
கமல் கோபம்: ஆனால் கமல்ஹாசன் அப்படி இல்லை. அவர் ரொம்பவும் எமோஷனலானவர். குணா படத்தை ரிலீஸ் செய்து எனக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அதன் பின்னர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேச போனேன். குணா படம் சரியாக போகவில்லை என்று கூறியதும், அவருக்கு முகம் மாறிவிட்டது. கம்முனு இருங்க. அந்த படத்தை எல்லாம் மக்கள் பார்க்கனும், கொண்டாடனும் என கோபமாக பேசினார். உடனே கமலுக்கு பின்னால் இருந்தவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என சைகை காட்ட, நாங்கள் அமைதியாக இருந்தோம். மொத்தம் 6 லட்ச ரூபாய்க்கு படத்தை நாங்கள் வாங்கி இருந்தோம். படம் 5 லட்சம் வரை வசூல் செய்யும் எனக் கூறினோம். அதன் பின்னர் விளம்பரச் செலவுகள் எல்லாம் யோசித்துப் பார்த்துவிட்டு, ரூபாய் 1.5 லட்சத்தை திருப்பிக் கொடுத்தார்கள்" என்று கூறியுள்ளார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்: இந்த பேட்டிக்குப் பின்னர், இன்றைய தலைமுறை சினிமா ரசிகர்கள், அந்த காலத்தில் பல மொக்கைப் படங்களை எல்லாம் இரண்டு மூன்று வருஷத்துக்கு ஓட வெச்சு இருக்கீங்க. பூமர் கதைகளைக் கொண்ட படங்களுக்கு எல்லாம் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருக்கீங்க. ஆனால் குணா மாதிரியான படத்தை தோல்விப் படமாக்கி விட்டுட்டாங்களே. இப்படிப்பட்டவர்களுக்கு மத்தியில் கமல்ஹாசன் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் நிலைத்து நின்று கொண்டு இருக்கிறார் என்றால் அதுக்கே அவரை தனியாக பாராட்டனும் எனக் கூறிவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











