என் நண்பரின் வாரிசு இல்லையே.. இயற்கைக்கும் இதயம் இல்லை... புனித் மரணம்... பாரதிராஜா உருக்கம்!

சென்னை: நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.

கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார் இன்று மரணமடைந்தார். ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்ட போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதையடுத்து பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் புனித் ராஜ்குமார்.

அகால மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

அகால மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டதாக தெரிவித்த மருத்துவர்கள், அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி புனித் ராஜ்குமார் மரணமடைந்தார். அவரது இந்த அகால மரணம் ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபலங்கள்.. ரசிகர்கள்.. இரங்கல்..

பிரபலங்கள்.. ரசிகர்கள்.. இரங்கல்..

அவரது மறைவுக்கு கன்னட சினிமா மட்டுமின்றி தமிழ் மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் தங்களின் துக்கத்தை பகிர்ந்து வருகின்றனர்.

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாருக்கு அஷ்வினி என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். புனித் ராஜ்குமாரின் உடல் கண்டீரவா மைதானத்தில் நாளை மறுநாள் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இயற்கைக்கு இதயம் இல்லை

இயற்கைக்கு இதயம் இல்லை

இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இயக்குநர் பாரதிராஜா இரங்கல் தெரிவித்துள்ளார். தொடர்பான அவரது பதிவில், கன்னட பவர் ஸ்டாரான எனது நண்பர் ராஜ்குமாரின் சினிமா வாரிசு இப்போது இல்லை என்று கேட்பது நெஞ்சை உலுக்கும் செய்தி. புனித் ராஜ் குமாரின் அத்தகைய சிறந்த இளம் இதயத்திற்கு இயற்கையின் இதயம் இல்லை.

தாங்க முடியாத இழப்பு

தாங்க முடியாத இழப்பு

இது அவரது குடும்பத்திற்கும் தென்னிந்தியத் திரையுலகிற்கும் தாங்க முடியாத இழப்பு. அவரது குடும்பத்திற்கும் ரசிகர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள்... இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X