" வந்துருடா பாலு.." பேசும்போதே எஸ்பிபிக்காக கதறி அழுத பாரதிராஜா.. கலங்க வைக்கும் வீடியோ!

சென்னை: எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் குணமாகி வீடு திரும்ப வேண்டும் என்று கூறும்போதே இயக்குநர் பாரதிராஜா கதறி அழுதது ரசிகர்களை கலங்க வைத்துள்ளது.

Recommended Video

SPB யின் நினைவை பகிர்ந்த பிரபலங்கள் • Shivakumar, Rajini

திரையுலகில் 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாட்டு உலகின் பிதாமகராக இருப்பவர் எஸ்பி பாலசுப்ரமணியம். தற்போது உலகையே ஆட்டிப் படைக்கும் கொடூர கொரோனாவின் கைகளில் சிக்கியுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் எஸ்பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை அவ்வப்போது சற்று பின்னடைவை சந்தித்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வருகிறது.

பலரும் பிரார்த்தனை

பலரும் பிரார்த்தனை

வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியுவில் உள்ள எஸ்பி பாலசுப்ரமணியம் விரைவில் நலம் பெற வேண்டும் என சொல்லாதவர்களே இல்லை எனும் அளவுக்கு ரசிகர்களும் திரைத்துறை பிரபலங்களும், அரசியல்வாதிகளும், விளையாட்டுத்துறை ஆளுமைகளும் வேண்டி வருகின்றனர்.

பாரதிராஜா வீடியோ

பாரதிராஜா வீடியோ

இந்நிலையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான இயக்குநர் பாரதிராஜா, எஸ்பி பாலசுப்ரமணியம் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என கண்ணீர்மல்க வீடியோ வெளியிட்டுள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில் அவர் பேசியிருப்பதாவது, " இது ஒரு பொன்மாலை பொழுது.. இன்றளவும் உலகமே கேட்டு வியந்துபோகும் பாடல்.

கண்ணீர் விடுகிறோம்

கண்ணீர் விடுகிறோம்

வைரமுத்து அங்குதான் உதிக்கிறான். பொன் மாலை பொழுது நீ பாடலாம்.. ஆனா உனக்கு பொன்மாலை பொழுது வரக்கூடாது.. பொன் காலை பொழுதுதான் வரவேண்டும்.. பாலு.. நான் மட்டும் இல்லடா.. உலகத்தில் உள்ள அத்தனை கலைஞர்களும் கண்ணீர் விடுகிறோம்.

நான் விடும் கண்ணீர்

நான் விடும் கண்ணீர்

இரண்டு நாட்களாக நான் விடும் கண்ணீர்.. அது என் கன்னங்களில் வழியும் போது அதை துடைத்து துடைத்து எறிந்துகொண்டிருக்கிறேன். இப்போது கூட இந்த பதிவில் அது வந்துவிடக்கூடாது என நான் நிதானமாக பேசுகிறேன். பாலு வந்துருவடா.. நான் வணங்கும் பஞ்ச பூதங்கள் உண்மை என்றால் நீ மறுபடியும் வருவாய்.

வந்துருடா பாலு..

வந்துருடா பாலு..

எங்களுடன் பழகுகிறாய்.. இன்னும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடுகிறாய்.. நீ ஒரு ஆண் குயில்.. வந்துருடா பாலு.." இப்படி பேசிக் கொண்டிருக்கும் போதே இடை இடையே நா தழுதழுத்தார் இயக்குநர் பாரதிராஜா. கடைசியில் வந்துருடா பாலு என்று கூறி கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதுவிட்டார்.

கலங்க வைத்துள்ளது

கலங்க வைத்துள்ளது

அவரது இந்த வீடியோ பார்ப்பவர்களை கலங்க செய்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் நிச்சயம் எஸ்பிபி சார் குணமாகி வந்துவிடுவார் என இயக்குநர் பாரதிராஜாவுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் நமது பாலு சார் மீண்டு வர மனம் உருகி பிரார்த்திப்போம் என்றும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X