Don't Miss!
- News ஓயாத மணிப்பூர் கலவரம்.. பூத்களை கைப்பற்ற முயற்சி? மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டால் பதற்றம்
- Technology கெத்தா வெளிவரும் Vivo V30e 5G.. வெல்வெட் ரெட் லுக்கில் தருமாறு அம்சங்கள்.. விலை என்ன இருக்கும்?
- Finance துபாயில் இருக்கும் இந்தியர்களே.. முதல்ல இதை படிங்க..!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Lifestyle தினமும் எவ்வளவு சர்க்கரை உட்கொள்வது பாதுகாப்பானது தெரியுமா? இத்தனை ஸ்பூனுக்கு மேல தெரியாம கூட சாப்பிடாதீங்க...
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
இயக்குநர் பாரதிராஜா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.. என்ன பிரச்சினை மருத்துவமனை அறிக்கை!
சென்னை : இயக்குநர் இமயம் என்ற பாராட்டுக்கு உரியவர் இயக்குநர் பாரதிராஜா. பல வித்தியாசமான படங்களை இவர் கொடுத்துள்ளார்.
கிராமத்து மண்மணம் சார்ந்த படங்களையும் த்ரில்லர் வகைக் கதைகளையும் இவரது இயக்கத்தில் பார்க்க முடிந்தது.
தற்போது இயக்கத்தை விட்டுவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் பாரதிராஜா. இவரது சிறப்பான நடிப்பில் பல படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.
“நான் சந்தித்த சிறந்த மனிதர்… பார்த்ததுமே நண்பராக மாறிவிடுகிறார்”: அஜித்தை புகழ்ந்த காஷ்மீர் ரசிகர்
இயக்குநர் பாரதிராஜா
இயக்குநர் பாரதிராஜா 16 வயதினிலே உள்ளிட்ட பல படங்களை கிராமத்து மண்மணம் மாறாமல் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார். இவரது இயக்கத்தில் எப்போதுமே அவுட்டோர் சூட்டிங்குகள் அதிகமாக காணப்படும். செட்கள் அமைக்கப்பட்டு அரங்கத்திற்குள் சூட்டிங் நடத்தப்பட்ட நிலையில், இவரது அவுட்டோர் சூட்டிங்குகள் சிறப்பாக பார்க்கப்பட்டன.
சிறப்பான படங்கள்
அழகான கமல்ஹாசன் என்ற நடிகரை 16 வயதினிலே படத்தில் பக்கா கிராமத்து ஆளாக, சப்பாணியாக காட்டியிருப்பார். அந்தக் கேரக்டர்களையும் ரசிகர்கள் ரசிக்கும்படி செய்திருப்பார். பின்பு அதே கமல்ஹாசனை கிளாசாக சிகப்பு ரோஜாக்கள் படத்தில் காட்டியிருப்பார். ஆனால் இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோவாக நடித்திருப்பார் கமல்.
நடிப்பில் ஆர்வம்
இப்படி தனது படங்களில் வித்தியாசங்களை புகுத்திய பாரதிராஜா, கிழக்கு சீமையிலே படத்தில் அண்ணன் -தங்கை பாசத்தை சிறப்பாக கொடுத்திருந்தார். மேலும் பல தளங்களில் சிறப்பான கதைக்களங்களில் பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில் சமீப காலங்களில் நடிப்பில் இவர் அதிகமான ஆர்வத்தை காட்டி வருகிறார்.
திருச்சிற்றம்பலம் படம்
எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடிகராக, இயல்பான நடிப்பால் அனைவரையும் கவர்ந்துவந்த பாரதிராஜா நடிப்பில் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் என்ற படம் வெளியாகி இவரது கேரக்டருக்கு மிகச்சிறந்த விமர்சனங்களை பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் தனுஷின் தாத்தாவாக நடித்திருந்தார் பாரதிராஜா.
மருத்துவமனையில் சிகிச்சை
இந்தப் படத்தை தொடர்ந்து பல படங்களில் அவர் நடித்துவரும் நிலையில், சமீபத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் பாரதிராஜா. அவருக்கு தீவிர சிசிக்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கும் மாற்றப்பட்டார்.
தீவிர சிகிச்சை
இந்நிலையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டதாகவும் ஆல்டர்ட் சென்சோரியம் பாதிப்பால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாகவும் மருத்துவமனை தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று டிஸ்சார்ஜ்
தொடர்ந்து மருத்துவ நிபுணர்களின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது உடல்நிலை தேறியுள்ளதாகவும் இதையடுத்து இன்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.