twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'நோஞ்சான்' என்பதா? கிளம்பியது எதிர்ப்பு..' அது கோபத்தில் வந்த வார்த்தை' பாரதிராஜா திடீர் விளக்கம்!

    By
    |

    சென்னை: நோஞ்சான் என்ற வார்த்தை கோபத்தில் வெளிவந்த வார்த்தையே தவிர, உள்நோக்கத்துடன் கூறவில்லை என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

    Recommended Video

    தொழில் சுதந்திரம் எங்களுக்கு உண்டு! பாரதிராஜா சூரியாவிற்கு சப்போர்ட்

    பாரதிராஜா தலைமையில் தொடங்கப்பட்டுள்ள தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய அலுவலகத் திறப்பு விழா நேற்று நடந்தது.

    விழாவில் பாரதிராஜா, டி.சிவா, டி.ஜி.தியாகராஜன், சுரேஷ் காமாட்சி உள்பட பல தயாரிப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

     ஆண்ட்ரியாவுன் அடுத்தப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்! ஆண்ட்ரியாவுன் அடுத்தப்படத்தின் தலைப்பு என்ன தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

    உரிமை இல்லை

    உரிமை இல்லை

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இயக்குனர் பாரதிராஜா, தியேட்டர்களில் இருந்து எங்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான ஷேர் பற்றி தியேட்டர் உரிமையாளர் சங்கத்துக்கு தெரிவித்திருக்கிறோம். எங்கள் பொருளை எங்கு விற்க வேண்டும் என்பதை நாங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இதை இங்குதான் விற்க வேண்டும் என்று சொல்ல, யாருக்கும் உரிமை இல்லை என்று கூறியிருந்தார்.

    பயில்வான் மாதிரி

    பயில்வான் மாதிரி

    அப்போது உங்கள் சங்கத்தில் குறைவான உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள், அந்த சங்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் இருக்கிறார்களே என்ற கேள்விக்குப் பதிலளிக்கும்போது, 'வலுவுள்ள நூறுபேர் பயில்வான் மாதிரி இருக்கான், ஆயிரம் நோஞ்சான் இருக்கான், எதை வலுவுள்ளவன்னு சொல்வீங்க, புரியலை? என்று கூறியிருந்தார்.

    மன்னிப்புக் கேட்க வேண்டும்

    மன்னிப்புக் கேட்க வேண்டும்

    இது மற்ற தயாரிப்பாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து அவர்கள் வாட்ஸப் குரூப்பில் இயக்குனர் பாரதி ராஜாவுக்கு எதிரான கண்டனங்களைத் தெரிவித்தனர். சில தயாரிப்பாளர்கள், எங்களை நோஞ்சன் என்ற பாரதிராஜா மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்நிலையில் இதற்கு பாரதிராஜா விளக்கம் அளித்துள்ளார்.

    உள்நோக்கம் இல்லை

    உள்நோக்கம் இல்லை

    இதுபற்றி ட்விட்டரில், இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் 'நோஞ்சான்' என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களை காயப்படுத்தும் விதமாக இருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன். திரைத்துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையை கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான்.

    திட்டமிடுதல் இல்லை

    திட்டமிடுதல் இல்லை

    தவிர, வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை. மனதை காயப்படுத்தும் விதமாகப் பேசவேண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்தி இருந்தால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்று அர்த்தம்' என்று கூறியுள்ளார்.

    English summary
    Director Bharathiraja explained that the word came in anger and there was no motive in it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X