வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இயக்குநர் பாரதிராஜா.. வைரலாகும் போட்டோஸ்!
சென்னை: இயக்குநர் பாரதிராஜா கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட போட்டோக்கள் வைரலாகி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை உச்சத்தில் உள்ளது. இதனால் பல மாநிலங்களில் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றனர்.

பலி எண்ணிக்கை அதிகரிப்பு
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவலின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள போதும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபலங்களின் போட்டோஸ்
இந்நிலையில் பலரும் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தடுப்பூசியை போட்டு வருகின்றனர். பிரபலங்கள் பலரும் தாங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் போட்டோவை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இயக்குநர் பாரதிராஜா
அந்த வகையில் தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநர்களில் ஒருவரான பாரதிராஜா தடுப்பூசி போட்டுள்ளார் மருத்துவர்களை வீட்டிற்கே வரவழைத்து பாரதிராஜா கொரோனா தடுப்பூசியை போட்டுள்ளார்.

தடுப்பூசி போட்ட போட்டோ
பாரதிராஜா தடுப்பூசி போட்ட போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் ரஜினிகாந்த் கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை போட்டுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











