சீனு ராமசாமி என்னோட மகன்.. மாமனிதன் படம் பார்த்த பாரதிராஜா நெகிழ்ச்சி!

சென்னை : இயக்குநர் இமயம் என்ற பாராட்டுக்குரியவர் இயக்குநர் பாரதிராஜா. இவர் தற்போது படங்களை இயக்குவதில்லை.

Recommended Video

Maamanithan Public Opinion | Vijay Sethupathi | Seenu Ramasamy *Kollywood

மாறாக நடிகராக தன்னை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார். இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகின்றன.

மற்ற இயக்குநர்களின் படங்களின் பூஜைகள் உள்ளிட்டவற்றில் கலந்துக் கொண்டு அவர்களை வாழ்த்துவதை தன்னுடைய வழக்கமாக்கியுள்ளார் பாரதிராஜா.

உணர்வுப்பூர்வமான இயக்குநர்

உணர்வுப்பூர்வமான இயக்குநர்

பிரபல இயக்குநர் பாரதிராஜா உணர்வுபூர்வமான கதைகளை சிறப்பான திரைக்கதையுடன் ரசிகர்களுக்கு கொடுத்தவர். இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணைந்து சிறப்பான பல படங்களை சிறப்பான பாடல்களுடன் தந்தவர். ராதிகா, ரேவதி, ரேகா, ரஞ்சிதா, ராதா போன்ற சிறப்பான நாயகிகளை கோலிவுட்டில் அறிமுகம் செய்தவர்.

நடிகராக பாரதிராஜா

நடிகராக பாரதிராஜா

எந்த அளவிற்கு சிறப்பான படங்களை கொடுத்துள்ளாரோ, அதேபோல இவரை சில சிறப்பான கேரக்டர்களில் நடிகராகவும் பார்க்க முடிந்தது. நடிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர். தற்போது தன்னுடைய இயக்கத்தை தள்ளி வைத்துவிட்டு முழுநேர நடிகராக மாறியுள்ளார். எங்க வீட்டு பிள்ளை போன்ற பல படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

அப்பா, தாத்தா போன்ற கேரக்டர்களை ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இவரை இயக்குநர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு தங்களது படங்களில் நடிக்க வைத்து வருகின்றனர். இயக்குநர் இமயத்தை தங்களின் படத்தில் பயன்படுத்திய பெருமை இதன்மூலம் அவர்களுக்கு கிடைத்து வருகிறது.

படப்பூஜைகளில் பங்கேற்பு

படப்பூஜைகளில் பங்கேற்பு

படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் படப்பூஜைகள், ஆடியோ வெளியீடுகள் போன்றவற்றிலும் கலந்து கொண்டு, பல கருத்துக்களை பகிர்ந்து வருகிறார் பாரதிராஜா. சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைத்தன்யா நடிக்கும் இருமொழிப் படத்திற்கான பூஜையில் கலந்துக் கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்காக ஐதராபாத்திற்கு சென்றிருந்தார் பாரதிராஜா.

சீனு ராமசாமிக்கு பாராட்டு

சீனு ராமசாமிக்கு பாராட்டு

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகியுள்ள மாமனிதன் படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் சீனு ராமசாமியை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார் பாரதிராஜா. மேலும் சீனு ராமசாமியை தனது மகன் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். இயக்குநர் இமயம் என்று பாராட்டப்படும் பாரதிராஜாவிற்கு திரையுலகில் வாரிசு யாரும் இல்லை என்ற குறையை தற்போது சீனு ராமசாமி களைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

காலம் கடந்து ரிலீஸ்

காலம் கடந்து ரிலீஸ்

தர்மதுரை படத்தை தொடர்ந்து தற்போது சீனு ராமசாமியின் மாமனிதன் படம் வெளியாகியுள்ளது. கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ரிலீசாகாமல் இருந்த இந்தப் படம் தற்போது வெளியாகியுள்ளது. காலம் கடந்து ரிலீசான போதிலும் படம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

விரைவில் இடிமுழக்கம்

விரைவில் இடிமுழக்கம்

இந்தப் படத்தின்மூலம் சீனு ராமசாமியுடன் நான்காவது படத்தில் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். முன்னதாக தர்மதுரை, தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது மாமனிதன் ரிலீசை தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் இடிமுழக்கம் படத்தை சீனு ராமசாமி எடுத்து முடித்துள்ளார். இந்தப் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X