சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தில் இணையவுள்ள தரமணி ஹீரோ... பாரதிராஜா உறுதி!

சென்னை : நடிகர் வசந்த் ரவி, பாரதிராஜா லீட் ரோல்களில் நடித்து திரைக்கு வரவுள்ள படம் ராக்கி.

இந்தப் படத்தை நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் இந்தப் படத்தை வெளியிடவுள்ளது.

படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். வரும் 24ம் தேதி படம் ரிலீசாகவுள்ளது.

ராக்கி படம்

ராக்கி படம்

தரமணி புகழ் வசந்த் ரவி, பாரதிராஜா, ரவீனா ரவி லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் ராக்கி. இந்தப் படத்தை நயன்தாரா -விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் வெளியிடவுள்ளது. படத்தின் ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி சிறப்பான எதிர்பார்ப்பை படத்திற்கு ஏற்படுத்தியுள்ளது.

23ம் தேதி ரிலீஸ்

23ம் தேதி ரிலீஸ்

படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வரும் 23ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகளை ரவுடி பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது. படத்தின் ட்ரெயிலர் வெளியான நிலையில் தற்போது படத்தில் நயன்தாரா இடம்பெற்றுள்ள காலம் ஒரு துரோகி பாடல் வெளியாகவுள்ளது.

 கேங்ஸ்டர் படம்

கேங்ஸ்டர் படம்

மிரட்டலான கேங்ஸ்டர் படமாக ராக்கி உருவாகியுள்ளது. கடந்த ஆண்டில் ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. படத்தில் மிரட்டலான கேங்ஸ்டராக பாரதிராஜா நடித்துள்ளார். படத்தில் ரோகிணி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தர்புகா சிவா இசை

தர்புகா சிவா இசை

படத்திற்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். இந்நிலையில் வசந்த் ரவி, பாரதிராஜா, விக்னேஷ் சிவன் மற்றும் அருண் மாதேஸ்வரன் இணைந்து படத்தின் சிறப்பம்சங்கள் குறித்து விவாதித்தனர். அவர்களின் விவாதத்தில் பேசிய பாரதிராஜா தான் நடிகனாக நினைத்ததாகவும் ஆனால் அது தவறிவிட்டதாகவும் குறிப்பிட்டார்.

வசந்த் ரவி குறித்து பாரதிராஜா பாராட்டு

வசந்த் ரவி குறித்து பாரதிராஜா பாராட்டு

மேலும் வசந்த் ரவி சிறப்பான முகத் தோற்றத்தை கொண்டுள்ளதாகவும் அவரை வைத்து சிகப்பு ரோஜாக்கள் 2 படத்தை எடுக்க விரும்புவதாகவும் அதற்கு மிகவும் சிறப்பான தேர்வாக அவர் அமைவார் என்றும் குறிப்பிட்டுள்ளார். கமல் சிகப்பு ரோஜாக்கள் படத்தில் சில இடங்களில் மிகவும் மென்மையாக தோன்றியதாகவும் ஆனால் வசந்த் ரவி அந்த கேரக்டருக்கு சிறப்பாக அமைவார் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ப்ரெஞ்ச் பட ஹீரோவாக காட்சி

ப்ரெஞ்ச் பட ஹீரோவாக காட்சி

மேலும் ப்ரெஞ்ச் படத்தின் ஹீரோவாக அவர் காட்சியளிப்பதாகவும் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இதனிடையே, வசந்த் ரவி இயல்பான தோற்றத்தை கொண்டுள்ளதாலேயே தான் அவரை ராக்கி படத்திற்கு தேர்வு செய்ததாகவும் குறிப்பிட்டார்.

பல்துறை மன்னன் விக்னேஷ் சிவன்

பல்துறை மன்னன் விக்னேஷ் சிவன்

இதனிடையே, தரமணி படத்தில் தான் பணிபுரிந்ததாக விக்னேஷ் சிவன் குறிப்பிட்டார். இதையடுத்து அவரை பல்துறை மன்னன் என்று பாரதிராஜா பாராட்டினார். மேலும் ஒரு இயக்குநராக இருப்பவர் அனைத்து விஷயங்களையும் தெரிந்திருக்க வேண்டும் என்றும் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X