அதே கிண்டல் கேலி..அடுத்தபடத்திற்காக ஹேர் கலரிங் செய்த பாரதிராஜா.. சிகிச்சையளித்த மருத்துவர் பேட்டி!
சென்னை : இயக்குநர் பாரதிராஜாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவர் இன்று அடுத்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ஹேர் கலரிங் செய்து கொண்டதாக பேட்டில் கூறியுள்ளார்
என் இனிய தமிழ் மக்களே..என்ற வார்த்தையால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டிப்போடமுடியும் என்றால், அது பாரதி ராஜாவால் தான் முடியும். கிராமத்து மண் மனம் மாறாமல் பல வெற்றிப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென தனி ஒருஇடத்தை நிலையாக பிடித்து வைத்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
இயக்குநராக மட்டும் இல்லாமல் நடிகராகவும் கலக்கி வருகிறார். தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திருச்சிற்றம்பலத்தில், தனுஷின் தாத்தாவாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

லேசான மயக்கம்
கடந்த மாதம் மதுரையில் நடைபெற்ற விருமன் இசைவெளியீட்டு விழாவில், கலந்து கொண்டு பேசினார். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையம் வந்த அவருக்கு மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இதையடுத்து, அங்கேயே ஒரு நாள் தங்கியிருந்தார். பின் சென்னை திரும்பிய அவர், நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார்.

மருத்துவமனையில் அனுமதி
மீண்டும் அவருக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, சென்னை தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். நீர்ச்சத்து குறைபாடு இருப்பதால் மருத்துவர்கள் அவருக்கு ஓய்வு தேவை என்று அறிவுறுத்தி இருந்தனர். இதையடுத்து குடும்பத்தினர் ஆலோசனைப்படி சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு இயக்குநர் பாரதிராஜா மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்ததை அடுத்து தற்போது முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளார்.

மருத்துவர் பேட்டி
இந்நிலையில், பாரதி ராஜாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் சுவாமி கண்ணு அளித்துள்ள பேட்டியில், அவருக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தால், பாக்டீரியா கிருமியினால் நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தது. இந்த தொற்று அவருக்கு அதிகமாக இருநததால், ஆக்சிஜன் குறைந்து மயக்கமான நிலைக்கு சென்று விட்டார். எங்கள் நுரையீரல் மருத்துவர் குழு அவருக்கு முறையான சிகிச்சை அளித்தோம் என்றார்.

ஹேர் கலரிங்
அவர் எப்போதும் படங்களை பற்றி தான் பேசிக்கொண்டே இருந்தார், அனைவரையும் வீட்டிற்கு அழைத்து இருக்கிறார். உடல்நிலை சரியானதும் டான்ஸ் ஆடினார். மேலும், தனது அடுத்த படத்திற்காக முடியை கலரிங் செய்து கொண்டார். அவர் முழுடிமையாக குணமடைந்துவிட்டார் என்று மருத்துவர் சுவாமி கண்ணு அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











