ரஜினி ஆசைப்பட்ட பெரிய பழுவேட்டரையர் கேரக்டர்… பாரதிராஜா டிக் செய்தது இந்த வில்லன் நடிகரை தான்

சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் சரத்குமார் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்க விருப்பம் இருந்ததாகக் கூறினார்.

பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்க இவர் தான் சரியாக இருப்பார் என வில்லன் நடிகர் ஒருவரை இயக்குநர் பாரதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

பொன்னியின் செல்வன் பாத்திரங்கள்

பொன்னியின் செல்வன் பாத்திரங்கள்

தமிழ் சினிமாவின் கனவுப் படைப்பான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம், வரும் 30ம் தேதி வெளியாகிறது. மணிரத்னம் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மன் இசையமைத்துள்ளார். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ் என மிகப் பெரிய மல்டி ஸ்டார் திரைப்படமாக பொன்னியின் செல்வன் உருவாகியுள்ளது. இந்தப் படத்தைப் போலவே இதில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்கள் பற்றியும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. எந்தெந்த கேரக்டர்களில் எந்த நடிகர்கள் நடித்துள்ளனர் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

பெரிய பழுவேட்டரையராக நடிக்க ரஜினி ஆசை

பெரிய பழுவேட்டரையராக நடிக்க ரஜினி ஆசை

பொன்னியின் செல்வன் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில், ரஜினி, கமல் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். அப்போது பேசிய ரஜினி, பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நடிக்க ஆசை என மணிரத்னத்திடம் கேட்டேன். ஆனால், அவர் அதற்கு வேண்டாம் என சொல்லிவிட்டதாகக் கூறியிருந்தார். அதேபோல், ரஜினியின் விருப்பம் குறித்து பதிலளித்திருந்த மணிரத்னம், ரஜினி நடித்திருந்தால் கதையில் நிறைய மாற்றங்கள் செய்திருக்க வேண்டும் என சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இயக்குநர் பாரதிராஜாவின் விருப்பம்

இயக்குநர் பாரதிராஜாவின் விருப்பம்

வரும் 30ம் தேதி வெளியாகவுள்ள 'பொன்னியின் செல்வன்' படத்தில், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்துள்ளார். ஆனால், இந்த கேரக்டரில் நடிக்க யார் சரியாக இருப்பார் என இயக்குநர் பாரதிராஜா கருத்துக் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சைப் பெற்று வந்த பாரதிராஜாவை, நடிகர் நெப்போலியன் நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அப்போது அவரிடம், 'பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையர் கேரக்டரில் நீதான் நடித்திருக்க வேண்டும். உனது உயரத்துக்கும் கெட்டப்புக்கும் நீயே சரியாக இருந்திருப்பாய்" எனக் கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன்

அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன்

தொன்னூறுகளில் தமிழ் சினிமாவின் முக்கியமான வில்லன் நடிகராக கலக்கியவர் நெப்போலியன். பாரதிராஜாவின் 'கிழக்குச் சீமையிலே' திரைப்படத்தில் நடிப்பில் மிரட்டியிருப்பார். அதேபோல், சீவலப்பேரி பாண்டி, விருமாண்டி, தசாவதாரம் என முக்கியமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், தனது மகனின் சிகிச்சைக்காக அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்ட நெப்போலியன், சமீபகாலங்களாக தமிழ்ப் படங்களில் நடிக்கவில்லை. அதேநேரம் ஹாலிவுட்டில் இதுவரை 4 படங்களில் நடித்துள்ளதாகத் தெரிகிறது. இந்த நிலையில், பெரிய பழுவேட்டரையராக நெப்போலியன் நடித்திருந்தால் எப்படி இருக்கும் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X