மேல் சிகிச்சைக்காக மருத்துவமனை மாற்றப்பட்ட பாரதிராஜா.. நலமுடன் உள்ளதாக வைரமுத்து தகவல்!

சென்னை : பிரபல இயக்குநராக பல படங்களை இயல்பாக கொடுத்து பாசத்திற்குரிய பாரதிராஜாவாக மாறியவர் இயக்குநர் பாரதிராஜா.

Recommended Video

கைல காசு இருக்காது, Rajini-க்கு 1 வடை, BharathiRaja speech *Kollywood

இவரது இயக்கத்தில் படங்கள் ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது நடிப்பின்மூலமும் பல படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக சிறப்பான கேரக்டரில் நடத்திருந்தார்.

இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா இயல்பான பல படங்களை கொடுத்து ரசிகர்களை கவர்ந்தவர். ஸ்டூடியோக்களில் செட் அமைத்து நடந்துக் கொண்டிருந்த படப்பிடிப்புகளை வெளிப்புறப் படப்பிடிப்புகளாக மாற்றி, சாதாரண குப்பனையும், சுப்பனையும் கதையின் நாயகான மாற்றி அழகு பார்த்தவர் பாரதிராஜா.

பாசத்திற்குரிய பாரதிராஜா

பாசத்திற்குரிய பாரதிராஜா

பாசத்திற்குரிய பாரதிராஜா என்றே தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பாரதிராஜா, ராதிகா உள்ளிட்ட பல ஹீரோயின்களை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர். அதிகமான மேக்கப் இல்லாத ஹீரோக்களையும் ஹீரோயின்களையும் கொடுத்து, அதை அனைத்து தரப்பு மக்களையும் ரசிக்க வைத்தது அவரது சிறப்பு.

வில்லனை கிரேசாக காண்பித்த இயக்குநர்

வில்லனை கிரேசாக காண்பித்த இயக்குநர்

அதற்கு அவருக்கு உறுதுணையாக இருந்தது படத்தின் திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள்தான். வில்லனையும் கிரேசாக காண்பிக்க முடியும் என்பதையும் நிரூபித்தவர் இவர். 16 வயதினிலே படத்தில் ரஜினி அழகாக காண்பிக்கப்பட்டார். ஆனால் ஹீரோவாக நடித்த கமல் சப்பாணியாக இருந்தார்.

கவனத்தை பெற்ற டயலாக்குகள்

கவனத்தை பெற்ற டயலாக்குகள்

இந்தப் படத்தின் டயலாக்குகள், பத்த வச்சுட்டியே பரட்ட போனற் வசனங்கள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தந்தன. அந்த வகையில், கிராமத்து கதைக்களங்களில் மட்டுமில்லாமல் சிகப்பு ரோஜாக்கள் போன்ற திரில்லர் படங்களையும் கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டவர் பாரதிராஜா.

நடிப்பில் கவனம்

நடிப்பில் கவனம்

தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்த பாரதிராஜா ஒரு கட்டத்தில் படங்களில் நடிக்கவும் செய்தார். எங்க வீட்டுப் பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் மிகவும் வலிமையான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படம் இவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது.

பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு

பாரதிராஜாவுக்கு உடல்நலக்குறைவு

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை மேற்கொண்டுவந்தார். இவருக்கு நீர்ச்சத்து குறைந்துள்ளதாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் இவரது மகன் மனோஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றம்

எம்ஜிஎம் மருத்துவமனைக்கு மாற்றம்

இந்நிலையில் தற்போது டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின்பேரில் எம்ஜிஎம் மருத்துவமனைக்கு பாரதிராஜா இன்று மதியம் மாற்றப்பட்டார். அங்கு டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டது.

திரையுலகினர் பிரார்த்தனை

திரையுலகினர் பிரார்த்தனை

இதற்கான ஏற்பாடுகளை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏசி சண்முகம் செய்து வருகிறார். பாரதிராஜாவின் உடல்நிலை விரைவிலேயே தேற வேண்டி திரையுலகினர் தொடர்ந்து பிரார்த்தனை செய்து வருகின்றனர். பிரான்சில் உள்ள நடிகை ராதிகாவும் தனது குருவின் உடல்நிலை தேற அங்குள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி வழிபட்டார்.

இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜாவிற்கு நெஞ்சில் சளி உள்ளதாகவும் அவர் தற்போது உடல்நிலை தேறி நன்றாக பேசுவதாகவும் கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். எம்ஜிஎம் மருத்துவமனை வளாகத்தில் பேட்டியளித்த அவர், மற்றவர்களை பாரதிராஜா நன்றாக அடையாளம் கண்டு கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவம் விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என்றும் கவிஞர் வைரமுத்து தனது பேட்டியில் மேலும் கூறியுள்ளார். பாரதிராஜாவின் மனைவி, மகன் உள்ளிட்டவர்கள் அவரை அருகில் இருந்து கவனித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X