இயக்குநர் பாரதிராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி.. என்ன ஆச்சு?

சென்னை: தமிழ் சினிமாவின் மூத்த இயக்குநரான பாரதிராஜாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Recommended Video

கைல காசு இருக்காது, Rajini-க்கு 1 வடை, BharathiRaja speech *Kollywood

தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் தாத்தாவாக பாரதிராஜா நடித்த நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.

சமீபத்தில் மதுரையில் நடைபெற்ற கார்த்தியின் விருமன் பட இசை வெளியீட்டு விழாவிலும் பாரதிராஜா கலந்து கொண்டார்.

 இயக்குநர் பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா

"என் இனிய தமிழ் மக்களே" என தான் இயக்கும் படங்களில் தனது வாய்ஸ் ஓவர் உடன் ஆரம்பித்து தமிழ் சினிமா ரசிகர்களை அப்படியே கிராமத்துப் பக்கம் கூட்டிச் சென்று அந்த கரிசல் மண்ணையும் காற்றையும் சுவாசிக்க வைத்தவர் பாரதிராஜா. பதினாறு வயதினிலே படத்தில் கமலையும் ரஜினியையும் ஒன்றாக இணைத்து நடிக்க வைத்து சினிமா பயணத்தை தொடங்கியவர்.

பாரதிராஜாவின் பிறந்தநாள்

பாரதிராஜாவின் பிறந்தநாள்

இயக்குநர் பாரதிராஜாவின் உண்மையான பிறந்தநாளே ஆகஸ்ட் 23ம் தேதியான இன்று தான். ஆனால், தனது முதல் படமான 16 வயதினிலே படத்தின் சென்சார் சான்றிதழ் கிடைத்த ஜூலை 17ம் தேதியை தனது பிறந்தநாள் என பல ஆண்டுகளாக அவர் கொண்டாடி வருவதால் ரசிகர்களுக்கே அவரது பிறந்தநாள் எது என்கிற குழப்பம் அடிக்கடி ஏற்படத்தான் செய்யும்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இந்நிலையில், பிறந்தநாள் அதுவுமா திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் இயக்குநர் பாரதிராஜா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற திடுக்கிடும் தகவல் வெளியாகி ரசிகர்களையும் சினிமா பிரபலங்களையும் ஷாக் ஆக்கி உள்ளது.

பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு

பாரதிராஜாவுக்கு என்ன ஆச்சு

ஆனால், நெருங்கிய வட்டாரத்தில் விசாரித்ததில் அவருக்கு பயப்படும் அளவுக்கு ஒன்றும் ஆகவில்லை என்றும், லேசான உடல் நலச் சோர்வு தான் என்றும் 4 நாட்கள் மருத்துவமனையில் ஓய்வெடுத்த பின்னர் வீடு திரும்புவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

விருமன் விழா முடிந்ததும்

விருமன் விழா முடிந்ததும்

ஏற்கனவே கார்த்தியின் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்காக மதுரை சென்று விட்டு சென்னை திரும்பும் போதும், பாரதிராஜாவுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்த பின்னர் வீடு திரும்பினார். இந்நிலையில், அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சீனியர் திருச்சிற்றம்பலம்

சீனியர் திருச்சிற்றம்பலம்

இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் சீனியர் திருச்சிற்றம்பலமாக தனுஷுக்கு தாத்தாவாக பக்காவான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி உள்ளார் பாரதிராஜா. தனுஷ் உடன் இணைந்து கொண்டு அவர் சரக்கடிக்கும் காட்சிகளும் நித்யா மேனன் உடன் இணைந்து கொண்டு அவர் ஃபேஷியல் செய்யும் காட்சிகள் எல்லாம் தியேட்டரில் சிரிப்பலையை உருவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X