சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு போன பாரதிராஜா.. வீட்டிலேயே தனிமைப்படுத்தியது சுகாதாரத்துறை!

சென்னை: சென்னையில் இருந்து சொந்த ஊரான தேனிக்கு சென்ற இயக்குநர் பாரதிராஜாவை சுகாதாரத்துறை அதிகாரிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

தேனியில் தனிமைப்படுத்தப்பட்ட இயக்குனர் பாரதிராஜா | Bharathiraja

தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற இயக்குநர்களில் ஒருவர் பாரதிராஜா. இயக்குநர் இமயம் என அழைக்கப்படும் பாரதிராஜா, 16 வயதினிலே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார்.

இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருக்கும் பாரதிராஜா 6 தேசிய விருதுகள் உட்பட ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.

மீண்டும் ஒரு மரியாதை

மீண்டும் ஒரு மரியாதை

தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதம் அவரது இயக்கத்தில் மீண்டும் ஒரு மரியாதை என்ற படம் என்ற படம் வெளியானது. தற்போது ராக்கி, மாநாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா.

மாவட்ட எல்லை

மாவட்ட எல்லை

தேனி மாவட்டம் அள்ளி நகரத்தை பூர்விகமாக கொண்ட பாரதிராஜா, சென்னையில் இருந்து தனது சொந்த ஊரான தேனி மாவட்டத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் மாவட்ட எல்லையான தேவதானப்பட்டியில் வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

நெகட்டிவ்

நெகட்டிவ்

இதனை தொடர்ந்து இயக்குநர் பாரதிராஜாவுக்கும் மாவட்ட எல்லையில் மருத்துவ சோதனை நடத்தப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து என்ஆர்டி நகரில் உள்ள அவரது வீட்டில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை தனிமைப்படுத்தி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சுவரில் போஸ்டர்

சுவரில் போஸ்டர்

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உள்ள சென்னையில் இருந்து சென்றதாலும் பல மாவட்டங்களை கடந்து சென்றதாலும் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வீட்டில் தனிமைப்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாரதிராஜா வீட்டின் சுவற்றிலும் சுகாதாரத்துறை சார்பில் அதற்கான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X