வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்... இயக்குனர் பாரதிராஜா அப்படி, டைரக்டர் சுசீந்திரன் இப்படி, அறிக்கை!

By

சென்னை: உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவை விரட்டுவோம் என்று பாரதிராஜாவும் இதை ஞாபகப்படுத்தும் விதமாக மரக்கன்றை நடுவோம் என்று சுசீந்தரனும் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவை அடுத்து இத்தாலி, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்த வைரஸ்.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைப் பத்தாயிரத்தை தாண்டியுள்ளது.

6 பேர் உயிரிழப்பு

6 பேர் உயிரிழப்பு

இந்தியாவிலும் கொரோனா, பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைத் தடுக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்தாலும் இருநூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

படப்பிடிப்புகள் ரத்து

படப்பிடிப்புகள் ரத்து

இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி மூட உத்தர விடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் உள்ள தியேட்டர்கள் அடைக்கப்பட்டன. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சென்னையில் முக்கியமான கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு

ஊரடங்கு

இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

கொன்று விரட்டுவோம்

கொன்று விரட்டுவோம்

அதன்படி பொதுமக்கள் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், வளரும் விஞ்ஞானத்தில் கொரோனா போன்ற வைரஸ்கள் ஆச்சரியமானவை. இன்று ஒரு நாள் சூரிய ஒளி படாமல் பாதுகாத்துக் கொள்ளுங்கள். எதிர்ப்பு சக்தியால், பல போராட்டங்களை வென்றவர்கள் நாம். உடல் எதிர்ப்பு சக்தியால் கொரோனாவைக் கொன்று விரட்டுவோம். சுகாதாரம் ஒன்றே தற்போதைய மருந்து' என்று தெரிவித்துள்ளார்.

மரக்கன்று நடுவோம்

மரக்கன்று நடுவோம்

இயக்குனர் சுசீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த நாளை நாம் வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைக்கும் விதமாகவும் அதே நேரம் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வளவு முக்கியம் என்பதை உணரும் விதமாகவும், நாளை நாம் ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்றை நடுவோம். இது நம் வாழ்நாள் முழுவதும் இந்த நாளை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்' என்று தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X