பாரதிராஜாவை இயக்கும் மனோஜ் பாரதிராஜா.. மகனை கைத்தூக்கி விடும் இயக்குநர் இமயம்!

சென்னை : பாரதிராஜா இயக்கத்தில் தாஜ்மஹால் என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் மனோஜ் பாரதிராஜா. அவர் தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார்.

தற்போது தன்னுடைய தந்தையை வைத்து இயக்குநர் சுசீந்திரன் தயாரிப்பில் படமியக்கவுள்ளார் மனோஜ் பாரதிராஜா.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மனோஜ் பாரதிராஜா

நடிகர் மனோஜ் பாரதிராஜா

நடிகர் மனோஜ் பாரதிராஜா தன்னுடைய தந்தை பாரதிராஜாவின் இயக்கத்தில் தாஜ்மஹால் என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து சில படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் விருமன் படம் வெளியானது. இந்தப் படத்தில் கார்த்தி, அதீதி ஷங்கர் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார் மனோஜ். முன்னதாக பம்பாய் படத்தில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராகவும் மனோஜ் பணியாற்றியுள்ளார்.

சுசீந்திரன் தயாரிக்கும் படம்

சுசீந்திரன் தயாரிக்கும் படம்

இந்நிலையில் மனோஜ் தற்போது இயக்குநராக தனது புதிய படத்தை அறிவித்துள்ளார். இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளது. புதுமுகங்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள இந்தப் படத்தில் முக்கியமான கேரக்டரில் மனோஜின் தந்தையும் பிரபல இயக்குநருமான பாரதிராஜா இணைந்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

இசைக்கு முக்கியத்துவம்

இசைக்கு முக்கியத்துவம்

இந்த புதிய புராஜெக்ட் குறித்து இயக்குநர் சுசீந்திரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ள இந்தப் படம் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகவுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். படத்தின் சூட்டிங் அடுத்த மாதம் இறுதியில் துவங்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் முதல் பார்வையை மார்ச் 31ம் தேதி 10 முன்னணி இயக்குநர்கள் சமூக வலைதளங்களில் வெளியிட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

முதல் படத்திலேயே தந்தையை இயக்கும் மனோஜ்

முதல் படத்திலேயே தந்தையை இயக்கும் மனோஜ்

இதுகுறித்து தன்னுடைய முதல் படத்திலேயே சிறப்பான இயக்குநரும் தனது தந்தையுமான பாரதிராஜாவை இயக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மனோஜ் தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். மேலும் தான் துணை இயக்குநராக பணிபுரிந்த மணிரத்னத்தை சந்தித்து அவர் ஆசியை பெற்றுள்ளார். இந்தப் படம் அனைவரையும் கவரும்வகையில் அமையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தாஜ்மகால் படத்தின்மூலம் அறிமுகமான மனோஜ், சிறப்பான ஹீரோவாக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு நடிக்க அதிகமான வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

மணிரத்னத்திடம் ஆசி பெற்ற மனோஜ்

மணிரத்னத்திடம் ஆசி பெற்ற மனோஜ்

இந்நிலையில் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள மனோஜ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். அதிலும் பாரதிராஜாவையே இயக்கும் வாய்ப்பையும் பெற்றுள்ளார். இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து வெளியாகவுள்ள இந்தப் படம் அவருக்கு கைக்கொடுக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். இயக்கத்தை விட்டுவிட்டு படங்களில் நடித்து வருகிறார் பாரதிராஜா. அவர் தற்போது தன்னுடைய மகனுடைய இயக்கத்திலும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X