காலம் கழித்து ஒரு அழகான குடும்ப படம்.. 'ஆனந்தம் விளையாடு வீடு' படத்தை பாராட்டிய பாரதிராஜா!

சென்னை: ஆனந்தம் விளையாடும் படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, படத்தையும், படத்தில் நடித்துள்ள கேரக்டரையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.

Recommended Video

Anandhan Vilaiyadum Veedu Movie Audience Opinion | Gautam Karthick, Cheran

இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கத்தில், ஸ்ரீவாரி ஃபிலிம் சார்பில் தயாரிப்பாளர் P ரங்கநாதன் தயாரிப்பில், நடிகர் கௌதம் கார்த்திக்-சேரன் இணைந்து நடித்துள்ள "ஆனந்தம் விளையாடும் வீடு" திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இத்திரைப்படம் தமிழ் திரையுலக பிரபலங்களுக்காக சிறப்பு திரையிடல் செய்யப்பட்டது. இயக்குநர் இமயம் பாரதிராஜா, நடிகர் ஆரி, நடிகர் கலையரசன் ஆகியோர் படத்தை பார்த்து படக்குழுவினரை வாழ்த்தினர்.

பாசத்தை சொல்லும் படங்கள் வருவதேயில்லை

பாசத்தை சொல்லும் படங்கள் வருவதேயில்லை

அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா கூறியதாவது, பொதுவாகவே ஒரு படம் பார்த்தால் அதைப் பாராட்டி கூற வேண்டும், ஆனால் சில படங்களை மட்டும் தான், மனதாரா நாம் பாராட்டுவோம். சமீப காலமாக தமிழ் சினிமாவில் டெக்னிகலாக பிரமாண்டமான படங்கள் வருகிறது. ஆனால் பாசத்தையும், நேசத்தையும் சொல்வதற்கான படங்கள் வருவதே இல்லை.

தலைப்பே அழகாக இருக்கிறது

தலைப்பே அழகாக இருக்கிறது

பல காலம் கழித்து நம் உறவுகளின் கதையை இந்தப்படம் சொல்கிறது. ஆனந்தம் விளையாடும் வீடு தலைப்பே அழகாக இருக்கிறது. குடும்பம் சில உறவுகளால் சிக்கலுக்குள்ளாகும் உறவும் பந்தமும் மீண்டும் ஒன்று சேரும், இதை நுணுக்கமாக தன் திரைக்கதையால் அழகாக சொல்லியிருக்கிறான் இயக்குநர் நந்தா பெரியசாமி.

கண்கலங்க வைத்துவிட்டது

கண்கலங்க வைத்துவிட்டது

சேரன் எப்போதும் என்னுடைய பிரதிபலிப்பு, என்னுடைய சினிமாவை எடுப்பவன். இந்தப்படத்தில் ஒரு குடும்பத்தை தாங்கும் மூத்தவனாக அருமையாக செய்திருகிறான். முழுப்படத்தையும் தூக்கி சுமந்திருக்கிறான். நானே இயக்குநர் என்றாலும், அவனது நடிப்பு என்னையே சில இடங்களில் கண்கலங்க வைத்துவிட்டது.

காலம் கழித்து அழகான படம்

காலம் கழித்து அழகான படம்

உணர்வுகளால் கட்டிப்போட்டு விட்டான். சரவணன் அழகான கலைஞன், மூத்த அண்ணனாக அற்புதமாக நடித்திருக்கிறான். நிறைய கதாப்பாத்திரங்கள் நிறைய நட்சத்திரங்கள், எல்லோரையும் வைத்து படம் எடுப்பது கஷ்டம், ஜோ மல்லூரி முதற்கொண்டு, எல்லோரும் அழகாக நடித்திருக்கிறார்கள். பல காலம் கழித்து ஒரு அழகான குடும்ப படம்.

கண்டிப்பாக கண்ணீர் சிந்துவார்கள்

கண்டிப்பாக கண்ணீர் சிந்துவார்கள்

இந்த வாழ்க்கையை வாழ்ந்தவனால் தான் இப்படிப்பட்ட கதையை சொல்ல வேண்டும் அதை மிக அற்புதமாக செய்திருக்கிறான் நந்தா பெரியசாமி. கௌதம் கார்த்திக் மிக அழகாக நடித்துள்ளான். பிரிந்திருக்கும் உறவுகள் இந்த படத்தை பார்த்தால் கண்டிப்பாக கண்ணீர் சிந்துவார்கள், உருகுவார்கள். தமிழ் உறவு முறை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, உதாரணமாக இந்தப்படம் உள்ளது. இந்தப்படத்தை உருவாக்கிய அனைவருக்கும் வாழ்த்துக்கள்... என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X