For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அந்தப்பக்கம் இரண்டாம் குத்துக்கு செம டோஸ்.. இந்த பக்கம் ரணசிங்கத்துக்கு பாராட்டு.. பாரதிராஜா அதிரடி!

  |

  சென்னை: ஒரு பக்கம் இரண்டாம் குத்து படத்தின் போஸ்டரையும் டீசரையும் கடுமையாக விமர்சித்த இயக்குநர் பாரதிராஜா, மறுப்பக்கம் கபெ ரணசிங்கம் படத்தை பாராட்டியுள்ளார்.

  இரண்டாம் குத்து படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே பெரும் சர்ச்சையான நிலையில் அதன் டீசர் நேற்று வெளியானது.

  சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசமான டயலாக்குகள் படத்தில் நிரம்பி வழிந்தன. பெண் என்றும் பார்க்காமல் படத்தின் ஹீரோயினுக்கும் பச்சை பச்சையாய் டயலாக் வைத்திருந்தனர்.

  பிக்பாஸ் வீட்டில் பெண்களால் தான் சண்டையே.. பிரபல இயக்குநர் அதிரடி பேட்டி.. என்ன சொல்றாரு பாருங்க!பிக்பாஸ் வீட்டில் பெண்களால் தான் சண்டையே.. பிரபல இயக்குநர் அதிரடி பேட்டி.. என்ன சொல்றாரு பாருங்க!

  பழமாகவே பார்க்க முடியாது

  பழமாகவே பார்க்க முடியாது

  வாழைப்பழத்தை இனி வாழை பழமாகவே பார்க்க முடியாத அளவுக்கு அதனை அத்தனை ஆபாசமாக சித்தரித்திருந்தனர். முழுக்க முழுக்க டபுள் மீனிங் டயலாக், ஆபாச காட்சிகள் என படுமோசமாக இருந்தது டீசர்.

  ஆளே இல்லையா

  ஆளே இல்லையா

  இதனை பார்த்த சில நெட்டிசன்கள், இந்த அக்கிரமத்தை கேட்க ஆளே இல்லயா? இதற்கு பிட்டு படமே எடுத்து விடலாம் என்று கூறி தங்களின் ஆதங்கத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் இரண்டாம் குத்து டீசரை கடுமையாக விமர்சித்து அறிக்கை வெளியிட்டார்.

  இதற்காகவா?

  இதற்காகவா?

  வாழைப்பழத்தை குறிகளாகச் செய்து அதைக் கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அவ்வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்?

  நடுத்தெருவில்..

  நடுத்தெருவில்..

  இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத்தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன்.

  ஆவேசம்

  ஆவேசம்

  "இரண்டாம் குத்து" என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன். இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? என ஆவேசமாக கூறியிருந்தார் பாரதிராஜா.

  CLIMAX ல கண்டிப்பா கண்ணீர் வரும் | CLOSE CALL WITH CINEMATOGRAPHER EKAMBARAM | FILMIBEAT TAMIL
  ரணசிங்கத்துக்கு பாராட்டு

  ரணசிங்கத்துக்கு பாராட்டு

  பாரதிராஜாவின் இந்த ஆவேசமான அறிக்கை தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டாம் குத்து டீசரை அந்தப் பக்கம் விளாசிய இயக்குநர் பாரதிராஜா, இந்த பக்கம் க பெ ரணசிங்கம் படத்தை பாராட்டியிருக்கிறார். இதன் மூலம் நல்ல படைப்புகளை பாராட்டுவேன், கேவலமான படைப்புகளை எதிர்ப்பேன் என தனது நிலைப்பாட்டை காட்டியிருக்கிறார் பாரதிராஜா.

  வாழ்த்துகள்

  வாழ்த்துகள்

  இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், க/ பெரணசிங்கம் சிறந்த கதை பின்புலத்துடன், அழுத்தமான கதாபாத்திரங்களுடன் முதல் படைப்பை மிகஅழுத்தமாக கூறி முத்திரை பதித்திருக்கும் விருமாண்டிக்கும், விஜய்சேதுபதி,ஐஸ்வர்யா ராஜேஷ்,மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும், கவிப்பேரரசு வைரமுத்து அவர்களுக்கும் வாழ்த்துக்கள். அன்புடன் பாரதிராஜா.. என தெரிவித்துள்ளார்.

  English summary
  Director Bharathiraja praises Ka pae Ranasingam movie. He congratulates Pa Virumandi for his first attempt.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X