'பொன்மகள் வந்தாள்' கண்களை கலங்கடித்துவிட்டது.. சமூகத்தையும் கலங்கடிக்கும்.. உருகும் பாரதிராஜா!
சென்னை: பொன்மகள் வந்தாள் படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா பதிவிட்டுள்ள டிவிட் வைரலாகி வருகிறது.
Recommended Video
ஜோதிகா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பொன்மகள் வந்தாள். இந்தப் படத்தை 2டி எண்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சூர்யா தயாரித்துள்ளார்.
'பொன் மகள் வந்தாள்' திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஜே.ஜே.ஃபெட்ரிக் இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரங்களில் பார்த்திபன், கே.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.

எதிர்ப்பு
இப்படம் நாளை அமேஸான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் அமேஸான் தளத்தில் படத்தை வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பாராட்டு
அவர்களின் எதிர்ப்பை மீறி பொன்மகள் வந்தாள் திரைப்படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பொன்மகள் வந்தால் படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களின் சமூக வலைதள பக்கத்தில் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா படத்தை உருக்கமாக பாராட்டி உள்ளார்.

கலங்கடித்துவிட்டது
இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அரியாத வயதில் காமத்தை சுமந்து,வெளியில் சொல்ல முடியாமல் வாழும்,பெண்களுக்காக வந்திருக்கிறாள் இந்த பொன்மகள். இது பெண்களுக்கான படம் அல்ல,பாலியல் குற்றங்கள் செய்பவர்களுக்கு இது ஒரு பாடம்.. இயக்குனரின் இயக்கமும்,ஜோதிகா அவர்களின் உணர்ச்சி் சார்ந்த நடிப்பின் இறுதிக்காட்சிகள் கண்களை கலங்கடித்து விட்டது. இந்த "பொன்மகள் வந்தாள்" கண்டிப்பாக சமூகத்தை கலங்கடிக்கும்.. என பதிவிட்டுள்ளார்.

பெண்மை காப்போம்
இதேபோல் பொன்மகள் வந்தாள் படம் குறித்து இயக்குநர் சமுத்திரக்கனி பதிவிட்டுள்ள இந்த டிவிட்டில், பொன்மகள் வந்தாள்... ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய திரைப்படம். பெண்மை காப்போம்... கிரியேட்டிவ் டீம் & ஜோதிகா மேடம்.. வாழ்த்துக்கள்...! என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











