ரொம்ப பெருமையாக இருக்கு… “ரைட்டர்“ படம் பார்த்து நெகிழ்ந்த பாரதிராஜா!
சென்னை : அறிமுக இயக்குனர் பிராங்கிளின் ஜேக்கப் இயக்கத்தில் உருவாகி உள்ள ரைட்டர் திரைப்படத்தை பார்த்து நெகிழ்ந்ததாக இயக்குனர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.
தரமான படங்களையும் கலைஞர்களையும் உருவாக்கும் இயக்குனர் பா ரஞ்சித்திற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து உள்ளார்.
இப்படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

நீலம் புரொடக்சன்
இயக்குநர் பா ரஞ்சித் நீலம் புரொடக்சன் சார்பில் ரைட்டர் படத்தை தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கும் இப்படத்தில் நடிகர் சமுத்திரக்கனி கதாநாயகனாக நடித்துள்ளார். திலீபன், இனியா, சுப்ரமணிய சிவா ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நேர்மையான போலீஸ்
சமுத்திரக்கனி இப்படத்தின் போலீசாக நடித்துள்ளார். ஒரு நேர்மையான போலீசுக்கு சமூகத்திலும் தனது அலுவலகத்திலும் ஏற்படும் பிரச்சனைகளை இப்படம் பேசியுள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

பெருமையாக இருக்கிறது
இந்நிலையில் ரைட்டர் படத்தின் சிறப்புக் காட்சி நேற்று திரையிடப்பட்டது. இதில் இயக்குனர் பாரதிராஜா மற்றும் பாக்கியராஜ் இருவரும் ரைட்டர் படத்தை பார்த்து இயக்குனர் பிராங்ளினை வெகுவாக பாராட்டினர்.தமிழ் சினிமாவில் இப்படி ஒரு போலீஸ் கதை புதுமையாக உள்ளது. எனக்கு இது ரொம்ப பெருமையாக இருக்கிறது இளைய தலைமுறையினரிடமிருந்து இப்படிப்பட்ட படங்கள் வருவதைப் பார்க்கும்பொழுது தமிழ் சினிமா இன்னும் வளமானதாக மாறுகிறது. எப்போதும் அதிகமாக பேசி நடிக்கும் சமுத்திரக்கனி இந்தபடத்தில் அதிகம் பேசாமல் மிக அழகாக நடித்திருக்கிறார். அதை நான் ரசித்து பார்த்தேன்.
Recommended Video

வாழ்த்துக்கள்
இயக்குனர் பா.இரஞ்சித் தரமான படங்கள் தயாரிப்பதன் மூலம் நல்ல இயக்குனர்களை இந்த தமிழ்சினிமாவுக்கு தந்துகொண்டிருக்கிறார் அவருக்கும் எனது வாழ்த்துக்கள். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களும் அன்புகளும் என்று ரைட்டர் திரைப்படத்தை வெகுவாக புகழ்ந்து பாராட்டினார் பாரதிராஜா.


Click it and Unblock the Notifications











