Bharathiraja: எனக்கும் கமலுக்கும் தெரிந்த ரகசியம்.. பாரதிராஜா சுவாரஸ்யம்!

சென்னை: நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1978ம் ஆண்டில் வெளியான படம் சிவப்பு ரோஜாக்கள். ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகியிருந்தது.

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் ஆன்டி ஹீரோ கேரக்டரில் நடிகர் கமல்ஹாசன் நடித்திருந்தார்.

கமலுக்கு வில்லன் கேரக்டர் சரியாக இருக்குமா என்ற சந்தேகத்தை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்த நிலையில், படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து சூப்பர் ஹிட்டடித்தது.

Director Bharathiraja shares the climax scene of Sivappu Rojakkal mvoie and hails Kamal haasan

சிவப்பு ரோஜாக்கள் க்ளைமாக்ஸ் காட்சி குறித்து பாராட்டிய பாரதிராஜா: நடிகர் கமல்ஹாசன், ஸ்ரீதேவி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 1978ம் ஆண்டில் வெளியானது சிவப்பு ரோஜாக்கள். இந்தப் படத்தில் கமல் ஆன்டி ஹீரோவாக நடித்திருந்தார். இந்தப் படத்தின் திரைக்கதை, காட்சி அமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தை சூப்பர் ஹிட்டாக்கியது. கிராமத்து கதைக்களங்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்திவந்த இயக்குநர் பாரதிராஜா, இந்தப் படத்தின்மூலம் தான் எந்தவிதமான கதையையும் சிறப்பாக்குவேன் என்பதை நிரூபித்தார்.

முன்னதாக பாரதிராஜா இயக்கத்தில் 16 வயதினிலே மற்றும் கிழக்கே போகும் ரயில் என அடுத்தடுத்து கிராமத்து சப்ஜெக்டில் படங்கள் வெளியான நிலையில், அவர் கிராமத்து படங்களை மட்டுமே இயக்குவார் என்று அவர்மீது முத்திரை குத்தப்பட்டது. இதையடுத்துதான் சிவப்பு ரோஜாக்கள் படத்தை சிட்டி மற்றும் க்ரைம் த்ரில்லராக உருவாக்கி வெற்றி கண்டார் பாரதிராஜா. இளம் வயதில் பெண்களால் பாதிக்கப்பட்ட சைக்கோ த்ரில்லராக படத்தில் கமல் நடித்திருந்தார்.

இதுபோன்ற படங்கள் அந்த காலகட்டத்தில் மிகவும் குறைவு என்பதால், படத்தின் சிறப்பான திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகள் அனைத்தும் ரசிகர்களை கட்டிப் பேட்டது. பெண்களை காதலித்து அவர்களை கொலை செய்யும் கேரக்டரில் தன்னுடைய சிறப்பான ஸ்டைலையும் புகுத்தி சிறப்பாக நடித்திருந்தார் கமல்ஹாசன். இதற்காகவே ஸ்ரீதேவியை அவர் காதலிக்க, ஆனால் அவரது அடக்கம் உள்ளிட்ட பண்புகள் கமலை உண்மையாகவே காதலிக்க வைக்கிறது.

ஒரு கட்டத்தில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக் கொள்ள, தன்னுடைய கணவன் ஒரு சைக்கோ கொலையாளி என்று தெரியவரும் நிலையில் படத்தில் ஸ்ரீதேவியின் நடிப்பும் மிரட்டியது. கண்களாலேயே தன்னுடைய பதைபதைப்பையும் மிரட்சியையும் அவர் ரசிகர்களுக்கு கடத்தியிருப்பார். இந்தப் படம் 175 நாட்களை கடந்து திரையரங்குகளை ஆக்கிரமித்தது. படத்திற்கு சிறந்த நடிகர் மற்றும் இயக்குநருக்காக பிலிம்பேர் விருதுகள் கமல் மற்றும் பாரதிராஜாவுக்கு கிடைத்தன.

Director Bharathiraja shares the climax scene of Sivappu Rojakkal mvoie and hails Kamal haasan

இந்நிலையில் இத்தனை ஆண்டுகள் கழித்து தற்போது இந்தப் படத்தின் நினைவலைகளை பகிர்ந்துக் கொண்டுள்ளார் இயக்குநர் பாரதிராஜா. படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் சாரதா என் மனைவி என்று எழுதிவிட்டு கமல் திரும்புவார். அப்போது பாரதிராஜா ஒரு சொடக்கு போட்ட நிலையில், உடனடியாக கண்களில் இருந்து கண்ணீர் வருவதாக ஷாட் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்தக் காட்சியில் கமலின் பர்பார்மென்ஸ் உலகத்தரத்தில் இருக்கும் என்றும் யாராலும் இதை செய்ய முடியாது என்றும் பாரதிராஜா பாராட்டியுள்ளார்.

இதுபோன்ற காட்சிகளையும் எளிதாக செய்ததால்தான் கமல் உலகநாயகன் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளார். கமல் வில்லனாக நடிப்பதால் படத்திற்கு வரவேற்பு இருக்காது என்று அனைவரும் கூறிய நிலையில், தனக்கும் கமலுக்கும் மட்டுமே படம் சூப்பர் ஹிட்டடிக்கும் என்ற ரகசியம் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ரிலீசின்போது தேவி தியேட்டரில் துவங்கி எல்பின்சன் திரையரங்கம் வரையில் ரசிகர்களின் க்யூ இருக்கும் என்றும் அவர் தனது மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X