twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எனக்கு சினிமா வியாபாரம் தெரியாது: பாரதிராஜா

    By Mayura Akilan
    |

    எனக்கு சினிமா மட்டுமே எடுக்க தெரியும். வியாபாரம் செய்யத் தெரியாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

    இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் 'ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ்' என்ற நிறுவனத்தைத் தொடங்கியிருக்கிறார். படைப்பாளிகளையும், குறும்பட இயக்குநர்களையும், திரைப்பட ஆர்வலர்களையும், சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற திறமைசாலிகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டும் என்பதற்காக இந்நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த நிறுவனத்தின் தொடக்க விழா திங்கட்கிழமை (நவம்பர் 10) காலை சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் பாரதிராஜா இந்த நிறுவனத்தை தொடங்கி வைத்துப் பேசினார்.

    வன்முறை படமோ?

    வன்முறை படமோ?

    "'ஜிகர்தண்டா' படத்தின் போஸ்டர் மற்றும் ட்ரெய்லரை எல்லாம் பார்த்தபோது, என்ன இது இவ்வளவு வன்முறை படமா இருக்கிறதே என்று நினைத்தேன். தமிழ் சினிமாவில் வன்முறை காட்சிகள் அதிகரித்துவிட்டதே என்று கவலைபட்டேன்.

    தூக்கம் தொலைத்தேன்

    தூக்கம் தொலைத்தேன்

    சில நாட்களுக்கு பிறகு 'ஜிகர்தண்டா' பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மிரட்டி இருந்தார் கார்த்திக் சுப்புராஜ். 'ஜிகர்தண்டா' பார்த்துவிட்டு எனக்கு இரண்டு நாட்களுக்கு தூக்கம் வரவில்லை.

    நாயகன் பார்த்த போது

    நாயகன் பார்த்த போது

    இதற்கு முன்பு இதேபோன்று மணி ரத்னம் இயக்கிய 'நாயகன்' பார்த்துவிட்டு மூன்று நாட்களுக்கு தூக்கம் வரவில்லை. இன்றைய இளைய தலைமுறையினர் புதிய சிந்தனைகளோடு வருகிறார்கள். சினிமா தற்போது மிகவும் ஆரோக்கியமாக இருக்கிறது.

    ஜெயிக்கவேண்டும்

    ஜெயிக்கவேண்டும்

    சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்றால் வடுக்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். நான் எந்த ஒரு நடிகையும் நடிச்சு காட்டுங்க என்று கூறி தேர்வுசெய்ய மாட்டேன். ஒருத்தரை பார்ப்பேன், பிடித்திருந்தால் வாப்பா என்று அழைத்து வந்து நடிக்க வைப்பேன்.

    சினிமா வியாபாரம்

    சினிமா வியாபாரம்

    நான் காட்டுல பூத்த பூ மாதிரி. ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் பிருந்தாவனம் கார்டனில் பூத்த பூ போல இருக்கிறார்கள். நன்றாக செதுக்கிறார்கள். சினிமாவிற்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இன்னும் எனக்கு தெரியாத ஒன்று சினிமா வியாபாரம்தான்.

    சண்டை போட்ட பாக்யராஜ்

    சண்டை போட்ட பாக்யராஜ்

    முதல் இரண்டு பட ஹிட் கொடுத்துவிட்டு, மூன்றாவது படம் ஒப்பந்தமானபோது சம்பளத்தைத் தயங்கித் தயங்கி 15 ஆயிரம் என்று கேட்டேன். ஆனால், என்னுடைய உதவியாளர் பாக்யராஜ்தான் சண்டைப் போடு 30 ஆயிரம் வாங்கி கொடுத்தார்.

    வியாபாரம் தெரியாது

    வியாபாரம் தெரியாது

    எனக்கு சினிமா மட்டுமே எடுக்க தெரியும். வியாபாரம் தெரியாது. ஆனால், இன்றைய இளைய தலைமுறையினர் அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொண்டு வருகிறார்கள். இன்று கார்த்திக் சுப்புராஜ் தொடங்கியிருக்கும் இந்நிறுவனம் சிறப்பாக வர வேண்டும்" என்று வாழ்த்தினார் இயக்குநர் பாரதிராஜா.

    English summary
    Director Karthik Subbaraj’s “Stone Bench Creations” Official Launch event held at Sathyam Cinemas, Chennai. Bharathiraja, Karthik Subbaraj, Vijay Sethupathi, Siddharth, Bobby Simha, Ram, Sj Surya, CV Kumar, Balaji Mohan, Badri, Balaji Sakthivel, KE Gnanavel Raja, Soundar Raja graced the event.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X