'என் இனிய தமிழ் மக்களே'.. உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜாவை இனி 'இங்கே' எப்போதும் பார்க்கலாம்!

என் இனிய தமிழ் மக்களே எனும் பெயரில் இயக்குனர் பாரதிராஜா யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

சென்னை: இயக்குனர் பாரதிராஜா தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பல சரித்திரங்களை படைத்த இயக்குனர் இமயம் பாரதிராஜா தற்போதும் பிஸியாக இயங்கிக் கொண்டிருக்கிறார். ஓம் - ஓல்ட் மேன் எனும் ஒரு படத்தில் தானே நடித்து இயக்கியும் வருகிறார். இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.

சினிமாவில் மட்டுமல்லாமல் சமூக பிரச்சினைகளிலும் அடிக்கடி தலையிடுவது பாரதிராஜாவின் வழக்கம். சில சமயங்களில் சமூக பிரச்சினைகளுக்காக போராட்டத்திலும் இறங்கி இருக்கிறார்.

வரலாற்றை மாற்றியவர்

வரலாற்றை மாற்றியவர்

ஸ்டுடியோக்களில் மட்டுமே உருவாகி வந்த தமிழ் சினிமாவை, இயற்கை எழில் கொஞ்சும் வெளியுலகில் படைத்து டிரெண்டையே மாற்றியமைத்தவர் பாரதிராஜா. தனது படங்களில் மண் சார்ந்த வாழ்வியலை, கிராமத்து வெள்ளந்தி மனிதர்களை கதையின் நாயகர்களாக பாத்திரப்படை செய்து தமிழ் சினிமா வரலாற்றை மாற்றியமைத்தவர்.

யூடியூப் சேனல்

இத்தனை பெருமைகளுக்குரிய இயக்குனர் பாரதிராஜா, தனது வாழ்க்கை அனுபவங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொள்ள வருகிறார். இதற்காக அவர், என் இனிய தமிழ் மக்களே எனும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் பல்வேறு விஷயங்கள் குறித்து சுதந்திரமாக பகிர்ந்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளார்.

பூடகமாக சொல்லுவேன்

பூடகமாக சொல்லுவேன்

இதுகுறித்து அவர், "என் இனிய தமிழ் மக்களே நான் உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன். என் மீது எவ்வளவு பாசம் வைத்திருக்கிறீர்கள். இந்த மண்ணோடும், மக்களோடும், நான் சார்ந்து வாழ்ந்ததை தான் திரைப்படங்களின் வாயிலாக சொல்லியிருக்கிறேன். பூடகமாக அழகாக சொல்லுவேன்.

சுதந்திரமாக இருப்பேன்

சுதந்திரமாக இருப்பேன்

சினிமாவின் நுணுக்கங்களை உங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். நான் அண்ணாந்து பார்த்த கலைஞர், எம்ஜிஆர், சிவாஜி, ஜெயலலிதா, அவர்களோடு நான் முரண்பட்டது என எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன். சுவையாக இருக்கும். அதேசமயம் சுதந்திரமாகவே இருப்பேன்.

பாரதிராஜாவுக்கு இத்தனை முகங்களா!

பாரதிராஜாவுக்கு இத்தனை முகங்களா!

ஓ பாரதிராஜாவுக்கு இத்தனை முகங்கள் இருக்கிறதா என யோசிக்கும் அளவுக்கு எனது பகிர்வுகள் இருக்கும். இதை நான் புத்தகமாக வெளியிடலாம் தான். ஆனால் வாசிப்பு பழக்கம் குறைந்துவிட்டதால், யூடியூப் வாயிலாக உங்களோடு உரையாட வருகிறேன்", என பாரதிராஜா கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X