பொழுதுபோக்கிற்காக படம் செய்கிறான் தனுஷ்.. வாத்தி குறித்து மனம் திறந்த இயக்குநர் பாரதிராஜா

சென்னை: தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றிருக்கும் வாத்தி படம் குறித்து இயக்குநர் பாரதிராஜா மனம் திறந்து பேசியிருக்கிறார்.

வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் வாத்தி. சம்யுக்தா, பாரதிராஜா (சிறப்புத் தோற்றம்) சமுத்திரகனி, கென் கருணாஸ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இப்படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். கல்வி வியாபாரமாவதை அடிப்படையாக வைத்து உருவாகியிருக்கும் இந்தப் படமானது கடந்த 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

ரசிகர்களை ஏமாற்றிய வாத்தி

ரசிகர்களை ஏமாற்றிய வாத்தி

திருச்சிற்றம்பலம் படம் கொடுத்த வெற்றிக்கு பிறகு தனுஷ் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு இந்தப் படத்துக்கு சென்றனர். ஆனால் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறிவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, படத்தில் முழுக்க முழுக்க தெலுங்கு வாடை அடிப்பதாகவும், இது தமிழ் படமா இல்லை தெலுங்கு படமா என்ற குழப்பம் படம் முழுவதும் இருப்பதாகவும் ரசிகர்கள் வெளிப்படையாகவே கூறினர். இதனால் வாத்தி படம் சராசரிக்கும் கீழே என்ற நிலையோடு நிற்கிறது.

வாத்தி படம் குறித்து நெகிழ்ந்துபோன பாரதிராஜா

வாத்தி படம் குறித்து நெகிழ்ந்துபோன பாரதிராஜா

இந்தச் சூழலில் வாத்தி படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் பாரதிராஜா படம் குறித்தும், தனுஷ் குறித்தும் நெகிழ்ச்சியாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர், " என் திரையுலக பயணத்ஹ்டில் எத்தனியோ மைல்கற்களை தாண்டி வண்ட்க்ஹிருக்கிறேன். சில இடங்களில் ஸ்தம்பித்து நின்றிருக்கிறேன். அப்படி என் பயணத்தில் ஸ்தம்பித்து நின்ற இடம்தான் வாத்தி. இந்தப் படம் சமூகத்திற்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை கூறுகிறது.

தனுஷ் வெறும் நடிகன் மட்டுமில்லை

தனுஷ் வெறும் நடிகன் மட்டுமில்லை


தனுஷ் என் பிள்ளை மாதிரி. அவன் பொழுதுபோக்கிற்காக படம் எடுத்தாலும் சமுதாய நோக்கத்திற்காக எடுக்கிறார். இப்படிப்பட்ட பிள்ளை கிடைப்பதற்கு திரையுலகம் தவம் செய்திருக்க வேண்டும். அவன் நடிகன் மட்டுமில்லை; எழுத்தாளன், பாடகன், சிந்தனை மனிதன் என பல முகங்களை கொண்டவன் தனுஷ்.

மற்ற கலைஞர்களையும் பாராட்டிய பாரதிராஜா

மற்ற கலைஞர்களையும் பாராட்டிய பாரதிராஜா

எத்தனையோ முத்துக்கள் திரையுலகில் இருக்கின்றன. அந்த முத்துக்களில் ஒரு சிறந்த முத்து இயக்குநரும், நடிகருமான சமுத்திரக்கனி. சம்யுக்தாவிடம் ஒரு டீச்சருக்கான அம்சம் இருக்கிறது. ஜிவி பிரகாஷ் மிகப்பெரிய வரப்பிரசாதம். இந்த வருடத்தில் இசையமைப்பிற்கும் சரி நடிப்புக்கும் சரி ஜிவி பிரகாஷுக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X