விதியை மீறிய பாரதிராஜா? வெளியே சுற்றியதாக சர்ச்சை.. சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை!

சென்னை: இயக்குநர் பாரதிராஜா 14 நாட்கள் வீட்டிலேயே தனிப்படுத்தலில் உள்ள நிலையில் அவர் வெளியே சுற்றியதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Recommended Video

முதலமைச்சருக்கு நன்றி | மனுவை ஏற்ற அரசு | Bharathiraja Emotional Video

இயக்குநர் பாரதிராஜா கடந்த வாரம் தனது சொந்த ஊரான தேனி மாவட்டம் அல்லி நகரத்துக்கு சென்றார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது சகோதரியை காண சென்றிருந்தார் பாரதிராஜா.

சென்னையில் அதிகப்படியான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் சென்னையில் இருந்து சென்றதாலும், இடையில் பல மாவட்டங்களை கடந்து சென்றதாலும் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

வீட்டின் முன்பு ஸ்டிக்கர்

வீட்டின் முன்பு ஸ்டிக்கர்

இதில் அவருக்கும் அவருடன் சென்ற உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று நெகட்டிவ் என ரிசல்ட் வந்தது. இருப்பினும் அவரை வீட்டிலேயே இருக்குமாறு தனிமைப்படுத்தினர் சுகாதாரத்துறை அதிகாரிகள். மேலும் அவரது வீட்டின் முன்பு தனிமைப்படுத்தியதற்காக ஸ்டிக்கரை ஓட்டினர்.

பாரதிராஜா வீடியோ

பாரதிராஜா வீடியோ

அந்தபோட்டோக்கள் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி தலைப்புச் செய்தியானது. இதனை தொடர்ந்து தானாகவே மருத்துவ பரிசோதனைக்கு சென்றதாகவும், வீட்டில் தானாகவே தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் கூறினார் இயக்குநர் பாரதிராஜா.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

மேலும் தானும் தனது உதவியாளர்களும் ஆரோக்கியமாகவும் ஹெல்த்தியாகவும் இருப்பதாகவும் வீடியோ வெளியிட்டார்.இந்நிலையில் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் பாரதிராஜா. அதாவது இயக்குநர் பாரதிராஜா வீட்டில் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே சென்றிருப்பதாக புகார் எழுந்திருக்கிறது.

குரங்கணி சென்று திரும்பிய...

குரங்கணி சென்று திரும்பிய...

அதாவது சுகாதாரத்துறை பணியாளர் ஒருவர் இயக்குநர் பாரதி ராஜாவுடன் இருக்கும் போட்டோவை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் ''கொரோனா தடுப்பு பணிகளுக்காக குரங்கணி சென்று விட்டு திரும்பிய பாரதிராஜாவுடன் எடுத்த போட்டோ'' என பதிவிட்டுள்ளார்.

எப்படி சென்றார்?

எப்படி சென்றார்?

குரங்கணி இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதி. சிறந்த சுற்றுலாத்தளம், ட்ரெக்கிங் செல்ல சிறந்த இடம் என பல்வேறு விஷயங்களுக்கு பெயர் போனது. இந்நிலையில் வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பாரதிராஜா எப்படி குரங்கணிக்கு சென்று திரும்பியது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது.

விதியை மீறினாரா?

விதியை மீறினாரா?

இதுகுறித்து சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பவே, பாரதி ராஜா விதியை மீறி வீட்டை விட்டு வெளியே சென்றாரா என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இதனால் மீண்டும் தலைப்புச் செய்தியாகிவிட்டார் இயக்குநர் பாரதிராஜா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X