twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    The Family Man 2 வெப்சீரிஸ் விவகாரம்.. அமேசான் நிறுவனத்திற்கு இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை!

    |

    சென்னை: The Family Man 2 இணைய தொடரை நிறுத்தாவிட்டால் அமேசான் நிறுவனத்தை புறக்கணிக்க நேரிடும் என இயக்குநர் பாரதிராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    Recommended Video

    Family Man 2 சர்ச்சைக்கு Bigg Boss பிரபலங்கள் Losliya & Tharshan ஏன் பேசவில்லை

    அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான 'தி ஃபேமிலி மேன்' வெப் சீரிஸ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், ப்ரியாமணி, ஷரத் கேல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர்.

    மோசமான டிரெஸ்.. அதைவிட மோசமான ஆட்டம்.. வீடியோவை போட்டு வாங்கிக்கட்டும் டிக்டாக் இலக்கியா! மோசமான டிரெஸ்.. அதைவிட மோசமான ஆட்டம்.. வீடியோவை போட்டு வாங்கிக்கட்டும் டிக்டாக் இலக்கியா!

    ராஜ் மற்றும் டிகே இணை இந்தத் தொடரை இயக்கியிருந்தனர். முதல் சீஸனின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது சீஸன் வெளியாகியுள்ளது.

    தி ஃபேமிலி மேன் 2

    தி ஃபேமிலி மேன் 2

    ஜூன் 3-ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியான இந்த வெப் சீரிஸில் சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முதல் சீஸனை இயக்கிய இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே ஆகியோரே இரண்டாவது சீஸனையும் இயக்கியுள்ளனர்.

    தவறாக சித்தரித்து..

    தவறாக சித்தரித்து..

    இதில் பாலிவுட் நடிகர் மனோஜ் பாஜ்பாய், சமந்தா, பிரியாமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்தத்தொடரில் இலங்கை தமிழ் போராளிக்குழுக்களை தவறாக சித்தரித்துள்ளதாக சர்ச்சை எழுந்தது.

    தடை செய்ய கோரிக்கை

    தடை செய்ய கோரிக்கை

    இதற்கு பல்வேறு தமிழ் அமைப்புகளும் தமிழ் சினிமா பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இந்தத்தொடரை தடை செய்ய வேண்டும் என பல பிரபலங்கள் சமூகவலைதளங்கள் வாயிலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    மனவேதனை அளிக்கிறது

    மனவேதனை அளிக்கிறது

    இந்நிலையில் இயக்குநர் பாரதிராஜா தி ஃபேமிலிமேன் சீசன் 2 வெப் சீரிஸ் விவகாரம் தொடர்பாக அமேசான் நிறுவனத்துக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், " எங்கள் இனத்திற்கு எதிரான 'தி பேமிலி மேன் 2' இணையத் தொடரை நிறுத்த தமிழர்களும் தமிழ்நாட்டு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கோரிக்கை வைத்த பிறகும் கூட இந்திய ஒன்றிய அரசு அத்தொடரை நிறுத்த உத்தரவு பிறப்பிக்காமல் மெளனம் காப்பது எங்களுக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

    வன்மையாக கண்டிக்கிறேன்

    வன்மையாக கண்டிக்கிறேன்

    தமிழீழப் போராளிகளின் விடுதலை போராட்டக்களத்தையும், அவர்களின் வரலாற்றையும் அறியாத தகுதியற்ற நபர்களால், தமிழின விரோதிகளால் இத்தொடர் எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை தொடரின் காட்சிகள் உணர்த்துகின்றன. அறமும் வீரமும் தன்னலமற்ற ஈகமும் செறிந்த போராட்ட வரலாற்றை கொச்சைப்படுத்தும் நோக்கத்தோடும் தமிழினத்தின் மீது மிகுந்த வன்மத்தோடும் தொடரை உருவாக்கியிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

    நிறுத்த உத்தரவிட வேண்டும்

    நிறுத்த உத்தரவிட வேண்டும்

    இத்தொடரை உடனே நிறுத்த மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சர் திரு.பிரகாஷ் ஜவடேகர் உத்தரவிடவேண்டும். இத்தொடரில் தமிழ், முஸ்லீம், வங்காளி என குறிப்பிட்ட இனமக்களுக்கு எதிரான மன நிலையோடு தொடர்ச்சியாக எடுக்கப்படுவதை அனைவரும் அறிவீர்கள்.

    புறக்கணிக்க நேரிடும்

    புறக்கணிக்க நேரிடும்

    தி பேமிலி மேன் 2 தொடரை ஒளிபரப்பும் அமேசான் நிறுவனம் தாமாக முன்வந்து உடனடியாக ஒளிபரப்பை நிறுத்த வேண்டும். எங்கள் வேண்டுகோளை புறக்கணித்து தொடர்ந்து OTT தளத்தில் வெளிவந்தால் அமேசான் நிறுவனத்தின் அனைத்து விதமான வர்த்தகத்தையும் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்கள் பங்கெடுப்பதை தவிர்க்கவோ தடுக்கவோ இயலாது என்பதை கோடிட்டுக்காட்ட விரும்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

    English summary
    Director Bharathiraja warns Amazon to stop streaming The Family Man 2 web series. Director Bharathiraja has shared statement about it.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X