இது போதும் டா.. இன்னும் உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்.. தனுஷுக்கு பாரதிராஜா வாழ்த்து!
சென்னை: நடிகர் தனுஷுக்கு இயக்குநர் பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள தனுஷ் ஃபிலிம் பேர் விருகள், தேசிய விருது என ஏராளமான விருதுகளை குவித்துள்ளார்.
இன்று தனது 38வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனை முன்னிட்டு ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

நம்மையும் அறியாமல்
அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜா நடிகர் தனுஷுக்கு அறிக்கை மூலம் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, திரையில் தோன்றும் ஒரு சில கதாபாத்திரங்கள் நம்மையும் அறியாமல் நமக்குள் ஊடுறுவி நம் உணர்வோடு உறவோடு பின்னப்பட்டதாய் அமைந்துவிடும்..

அதிர்ச்சியில் உறைந்து
ஆனால் கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்த நபரின் உண்மையான குண நலன்கள் நிஜ வாழ்க்கையில் முற்றிலும் நேர்மாறாக இருப்பதை கண்டு நாம் அதிர்ச்சியில் உறைந்து விடுவதுண்டு.

இது போதும் டா..
நிஜ வாழ்க்கையில் எப்படியோ.. அதை திரையிலும் பிரதிபலிப்பவர்கள் ஒரு சிலரே.. அதில் உன்னை நான் முதன்மையானவனாகப் பார்க்கிறேன். எளிமை, தன்னடக்கம், விருதுகள் வென்று குவித்தாலும் நான் என்கின்ற அகந்தை அற்ற பணிவு.. சிறந்த கலை தொழில் நுட்ப அறிவு.. இது போதும் டா.. இன்னும் உலக விருதுகள் உன் வீட்டு கதவைத் தட்டும்.

சீருடன் சிறப்புடன்
பேரன்புமிக்க தங்க மகன் தனுஷ் இன்றைய நன் நாளில் எல்லா வளங்களும் பெற்று சீருடன் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்.. என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











