திரை மொழியை மெளனமாய் உடல் அசைவில் உலகை அதிரவைத்த ஒப்பற்ற நடிகன்.. தனுஷை வாழ்த்திய பாரதிராஜா!
சென்னை: நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு இயக்குநர் பாரதிராஜா அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நடிகர் தனுஷ் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர், பாடகர் என்ற பல முகங்களை கொண்டவர். இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும் இயக்குநர் செல்வராகவனின் சகோதரரும் ஆவார்.

நடிகர் தனுஷ் 2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் தனுஷ்.
ஏராளமான படங்களை தயாரித்துள்ளார். ஆடுகளம் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ், தயாரிப்பாளராகவும் தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் தனுஷ், தமிழ் மட்டுமின்றி பாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். இன்று தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு பிரபலங்கள் பலரும் நடிகர் தனுஷுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இயக்குநர் பாரதிராஜாவும் தனுஷ்க்கு டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், திரை மொழியை
மெளனமாய்
உடல் அசைவில்
உலகை அதிரவைத்த
ஒப்பற்ற நடிகன்.
என் மண்ணின் மைந்தன்.
உன் அசுர நடிப்பை கண்டு இன்னும் வியக்கிறேன்.
வாழ்த்துக்கள்
அன்புடன்
பாரதிராஜா என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











