என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக நான் தவிர்த்த ஓர் விதை.. விஜய்யை உருக்கமாக வாழ்த்திய இயக்குநர்!

சென்னை: நடிகர் விஜய்க்கு பிரபல இயக்குநரான பாரதிராஜா உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார்.

Recommended Video

Master Team special Wishes to Thalapathy Vijay | Malavika Mohanan, Anirudh

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவரான நடிகர் விஜய் இன்று தனது 46வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் ஒரு புறம் அவரை வாழ்த்து மழையில் நனைத்து வருகின்றனர்.

மறுபுறம் நடிகர் நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் நடிகர் விஜயை வாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல இயக்குநரான பாரதிராஜா நடிகர் விஜய்க்கு உருக்கமாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தவிர்த்த ஓர் விதை

தவிர்த்த ஓர் விதை

இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், என் கலைப் பயணத்தில் துரதிர்ஷ்டவசமாக, நான் தவிர்த்த ஓர் விதை. இன்று வலிகளை வலிமையாக்கி தமிழகத்தின் இளைஞர்களின், சொத்தாக உலகமே, கொண்டாடப்படும் "விஜய்க்கு" இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

பாசத்துடன் வாழ்த்துகிறேன்

பாசத்துடன் வாழ்த்துகிறேன்


காதலாகட்டும், நடுத்தர குடும்ப கதாபாத்திரமாகட்டும்
நையாண்டி, நக்கலுக்கான அந்த , உடல் பாவனை நடனத்தின் நளினம், சண்டைக்காட்சிகள், அதிலும் மேலாக
கோடிக் கணக்கான ரசிகர்களை உலகம் முழுவதும் ஈர்த்து வைத்திருக்கின்ற, வெற்றியின் V என்ற முதல் எழுத்தாகக் கொண்ட விஜய்க்கு 46வது பிறந்த நாளில், எல்லாசிறப்பும் பெற்று, நீடூழிவாழ பாசத்துடன் வாழ்த்துகிறேன்
அன்புடன் பாரதிராஜா என குறிப்பிட்டுள்ளார்.

வாழ்த்துக்கு நன்றி

வாழ்த்துக்கு நன்றி

பாரதிராஜாவின் இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் செம ஜாலியாகியுள்ளனர். பாரதிராஜாவின் இந்த உருக்கமான வாழ்த்துக்கு மனதார நன்றி தெரிவித்து வருகின்றனர் விஜய் ரசிகர்கள். உங்களை போன்ற லெஜன்ட்டிடம் இருந்து விஜய்க்கு வாழ்த்து கிடைப்பது பெரும் பாக்கியம் என்றும் கூறி வருகின்றனர்.

இப்படி ஒரு ஏக்கம்

இப்படி ஒரு ஏக்கம்

பாரதிராஜாவின் இந்த பதிவைப் பார்த்த இந்த நெட்டிசன், அப்பப்பா... இந்த இமயத்தின் மனதில் இப்படி ஒரு ஏக்கம் இருக்கிறதா... நடந்திருந்தால்..ஆஹாக... எப்படி இருந்திருக்கும். இப்போதும் நீங்கள் நினைத்தால் முடியும் இமயமே. அந்த கூட்டணியை எதிர்பார்க்கிறோம். இமயம், தளபதி, ஏஆர் ரஹ்மான், வைரமுத்து என கூட்டணி வரை முடிவு செய்து விட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X