Director Bharathi raja: தாத்தாவை வைத்து குறும்படம்.. பொன்னாடை போர்த்தி வாழ்த்திய பாரதிராஜா!

சென்னை: நடிகர் பாரதிராஜா தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளவர். என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்திற்குரிய பாரதிராஜா பேசுகிறேன் என்றுதான் இவரது படங்கள் துவங்கும். தன்னுடைய ரசிகர்கள் மீதான பாசத்தை அவர் தனது திரைப்படங்கள் வாயிலான வெளிப்படுத்தினார். அவரது படங்களை பார்க்க சென்றால், ஒவ்வொரு ரசிகருக்கும் அவர்கள் வாழ்க்கையையொட்டிய அனுபவங்கள் கண்டிப்பாக கிடைக்கும் என்பதை நடைமுறைப்படுத்தியவர் பாரதிராஜா. தற்போது வயதான நிலையிலும் படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

தன்னுடைய அறிமுகப்படமான 16 வயதினிலே படத்தை கடந்த 1977ம் ஆண்டில் இயக்கியிருந்தார் பாரதிராஜா. இந்தப் படம் ரசிகர்களின் பேவரைட் லிஸ்ட்டில் எப்போதுமே இடம்பெறும் படமாக அமைந்தது. காதல் மன்னனாக உலவிக் கொண்டிருந்த கமல்ஹாசனை இந்தப் படத்தில் சப்பாணியாக காட்டியிருந்தார் பாரதிராஜா. இந்தப் படத்தில் ரஜினியை பரட்டை என்ற கேரக்டரில் நடிக்கவைத்து அவருக்கும் இந்தப் படத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்திருந்தார். இதேபோல படத்தில் மயிலு கேரக்டரின் உருமாற்றம் எப்படி அமையும் என்பதையும் ரசிகர்கள் தற்போதும் சிலாகித்து பேசி வருகின்றனர்.

Director Bharathirajas grand daughter makes short film with lead character of him

இயக்குநர் பாரதிராஜா: இயக்குநர் பாரதிராஜா எவர்கிரீன் படங்களை கொடுத்தவர். கடந்த 1977ம் ஆண்டில் 16 வயதினிலே என்ற படத்தின்மூலம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி ஆகியோருக்கும் சிறப்பான கேரியரை உருவாக்கியவர் பாரதிராஜா. தொடர்ந்து சிவாஜி கணேசனின் முதல் மரியாதை, ராதிகா -சுதாகரின் கிழக்கே போகும் ரயில் போன்ற கிராமத்து கதைக்களங்களில் படங்களை கொடுத்துவந்த பாரதிராஜா, சிவப்பு ரோஜாக்கள் போன்ற படங்கள்மூலம் சிட்டி சப்ஜெக்டிலும் தன்னால் சிறப்பான த்ரில்லர் படங்களை கொடுக்க முடியும் என்று நிரூபித்தார். அலைகள் ஓய்வதில்லை என்ற காதல் படத்தை கொடுத்த பாரதிராஜாதான் வேதம் புதிது என்ற படத்தையும் கொடுத்திருந்தார்.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்: அண்ணன் -தங்கை பாசத்தை வெளிப்படுத்தும் வகையில் பாசமலர் படம் மட்டும்தான் இருக்கிறது என்ற குறையுயையும் தன்னுடைய கிழக்கு சீமையிலே படம் மூலம் தீர்த்து வைத்தார். இவ்வாறு காலத்தால் அழியாத பல படங்களை கொடுத்துள்ள பாரதிராஜா, தற்போது படங்களை இயக்குவதை கைவிட்டுவிட்டு முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். தனுஷ் உள்ளிட்ட ஹீரோக்களுடன் திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை எடுத்துக் கொண்ட பாரதிராஜா, சில தினங்களிலேயே மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கிவிட்டார்.

பாரதிராஜாவின் பேத்தி: இவரது மகன் மனோஜூம் ஒரு நடிகர்தான். பாரதிராஜா இயக்கத்தில் கடந்த 1999ம் ஆண்டில் வெளியான தாஜ்மகால் படத்தில் இவர் ஹீரோவாக என்ட்ரி ஆகியிருந்தார். தொடர்ந்து இவர் படங்களில் நடித்துவந்தாலும் அந்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. வாய்ப்புகளும்தான். இவர் தன்னுடன் நடித்த நந்தனாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு மதுவதனி, அர்த்திகா என இரு மகள்கள் உள்ளனர். இதில் மதுவதனி தன்னுடைய தாத்தாவை வைத்து குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார். தன்னுடைய பள்ளிக்காக அவர் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.

பேத்தி இயக்கத்தில் பாரதிராஜா: தன்னுடைய பேத்தி இந்த சிறிய வயதிலேயே சிறப்பாக படப்பிடிப்பில் வேலை செய்வதை பார்த்த இயக்குநர் பாரதிராஜா பெருமை கொண்டதுடன் அவரை பாராட்டும்வகையில் பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார். இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. அடுத்தடுத்து திரு மாணிக்கம், கள்வன் உள்ளிட்ட பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் பாரதிராஜா. அவரது இயக்கத்தில் பல பரிணாமங்களை அனுபவித்த ரசிகர்கள் தற்போது அவரது இயல்பான நடிப்பையும் என்ஜாய் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X