Director bharadhiraja: ஜனநாயகம் முக்கியம்.. பதவியை ராஜினாமா செய்றேன்.. சபாஷ் பாரதிராஜா!

சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜா இயக்குநர் உதவி இயக்குநர்களால் சங்கத்துக்கு தலைவராக வாக்கெடுப்பு இல்லாமல், ஏகமானதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இது நடந்தது கடந்த மாதம்.

ஆனால், அதற்குள் இயக்குநர் பாரதிராஜா இந்த பதிவியை ராஜினாமா செய்து உள்ளதாக இன்று கடிதம் மூலம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் தான் தேர்தல் நடத்தாமல் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அடைந்த மன சங்கடங்கள் குறித்து எழுதி இருக்கார். அதனால், இயக்குனர்கள் சங்கத்துக்கான தலைவரை ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கவும் கேட்டுள்ளார்.

தமிழ் மக்களே

தமிழ் மக்களே

பாரதிராஜாவின் படங்களில் மண்வாசனை அதிகமாக இருக்கும். அதனால்தானோ என்னவோ மன்வாசனை என்று கூட ஒரு படம் எடுத்து மக்களை அசத்தி இருப்பார். தன்னுடைய படத்துக்கு ஒரு இனிய அருமையான பாடல் கிடைத்து விட்டால் போதும். அதை படமாக்குவதில் மனிதர் அசத்தி விடுவார். இப்படி பாடல்களை படமாக்குவதற்கு எந்த நடன இயக்குநர்களையம் அவ்வளவாக நம்பியதில்லை. நடன மாஸ்டர் இல்லாமல் பல பாடல்களை இவர் படமாக்கி இருக்கார்.

ஏ.ஆர்.ரஹ்மான்

ஏ.ஆர்.ரஹ்மான்

இசை ஞானி இளையராஜா கூடவே வேலை பார்த்துவிட்டார், கிழக்கு சீமையிலே, கருத்தம்மா படத்தில் எல்லாம் ஏ.ஆர்.ரஹ்மான் கூட சேர்ந்து என்ன செய்யப்போகிறாரோ என்று, ரசிகர்கள் கவலைப் பட்டுக்கொண்டு இருந்த காலத்தில் பாடல்களை மிக அருமையாக படம்பிடித்து காட்டி இருந்தார் இயக்குநர் இமயம். அதிலும் கருத்தம்மா படத்தில் வரும் தென்மேற்கு பருவக்காற்று தேனிப் பக்கம் வீசும் போது சாரல் இன்ப சாரல் என்று அந்த பாடலை பார்க்கையில், நம் மீதும் சாரல் அடிக்கும் உணர்வுடன் பாரதிராஜா மெனக்கெட்டு படமாக்கி இருப்பது தெரியும்.

பாரதி ராஜா

பாரதி ராஜா

எத்தனையோ இயக்குனர்களை, நடிகர் ,நடிகைகளை பாரதிராஜா உருவாக்கி இருந்தாலும், அவரோடு சினிமாவுக்கும் அவருக்குமான பந்தம் முடிந்துவிடுமோ என்று கூட உண்மையான பாரதிராஜா நலம் விரும்பிகள் கவலைப் படுகிறார்கள். ஏனோ, மனோஜுக்கு திரையுலகில் நிரந்தர இடம் கிடைக்காமல் போனது.

மனசாட்சிக்கு விரோதம்

மனசாட்சிக்கு விரோதம்

மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, இப்படி சங்கத்தின் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்காமால், ஏக மனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த தலைவர் பதிவியை தான் ராஜினாமா செய்வதாகவும், தேர்தலில் போட்டியிடாமல் தலைவர் பதவியில் இருந்ததால் சங்கடங்களையும் அனுபவித்ததாக கூறி, பதவியை ராஜினாமா செய்துள்ளார்.அதோடு, தன்னை ஏக மனதாகத் தேர்ந்தெடுத்த இயக்குநர்கள், உதவி இயக்குநர்களுக்கு நன்றி சொல்லி இருக்கார் இந்த அற்புத கலைஞன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X