ஊசி இடம் கொடுக்காம நூல் எப்படி நுழையும் ? நடிகை ஸ்ரீரெட்டியை விளாசிய இயக்குநர்!
ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் பாராதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை: ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் என நடிகை ஸ்ரீரெட்டி குற்றச்சாட்டு குறித்து இயக்குநர் பாராதிராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
தெலுங்கு திரையுலகை சேர்ந்தவர் நடிகை ஸ்ரீரெட்டி. சினிமா வாய்ப்பு தருவதாக தெலுங்கு பட இயக்குநர்கள், இளம் நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக பகீர் குற்றச்சாட்டுக்களை கூறினார்.
இதுதொடர்பாக சாட்டிங் ஆதாரங்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு புயலை கிளப்பினார் ஸ்ரீரெட்டி.

முருகதாஸ், ஸ்ரீகாந்த்
இந்நிலையில் சென்னையில் மையம் கொண்டுள்ள ஸ்ரீரெட்டி தமிழ் லீக்ஸ் என்ற பெயரில் இயக்குநர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர் சி என பலரும் சினிமா வாய்ப்பு தருவதாக கூறி அனுபவித்ததாக கூறி சர்ச்சையை கிளப்பினார்.

ஆடிப்போன தமிழ் சினிமா
ஸ்ரீரெட்டியின் தமிழ் லீக்ஸ் அதிரடியால் ஆடிதான்போயுள்ளது தமிழ் திரையுலகம். அதே நேரத்தில் பலரும் ஸ்ரீரெட்டிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

பாரதிராஜா கருத்து
இந்நிலையில் ஸ்ரீரெட்டியின் தமிழ் திரையுலகினர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா கருத்து தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்த பாரதிராஜா ஸ்ரீரெட்டி குறித்து கூறியதாவது,

நூல் எப்படி நுழையும் ?
ஊசி இடம் கொடுக்காமல் நூல் எப்படி நுழையும் ? ஸ்ரீரெட்டி அனைத்திற்கும் அனுமதி கொடுத்துள்ளார்.

ஸ்ரீரெட்டி சம்மதத்துடன்தான்
ஸ்ரீரெட்டியின் சம்மதத்துடன் எல்லாம் நடந்திருக்கிறது. அப்படி இருக்கும்போது அதனை வைத்து இவர் விளம்பரம் தேடிக்கொள்ளக்கூடாது.

குறைசொல்லக்கூடாது
இதற்காக ஒட்டுமொத்த சினிமா துறையை குறைசொல்லக்கூடாது. இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். இதனிடையே ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு ஆளான தமிழ் நட்சத்திரங்கள் மவுனம் காத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











